நாகர்கோவில்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு வீடு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ராஜபாளையம் பெண் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார்.ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் ஆலப்புழா புன்னமடா பட்டர்பிளை மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் படகில் கடலுக்குள் சென்றனர். ஒருபடகில் இருந்து மற்றொரு படகுக்கு மாறும் போது சரண்யா தண்ணீரில் தவறி விழுந்தார். அவரை மீட்க முயற்சித்தும் பலன் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.அவரது உடல் மீட்கப்பட்டு ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற போது படகில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














