ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு

0
238

தமிழகத்தின் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இதில் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை இணைப்புகளாகும்.

நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெறக் கூடாது. இந்நிலையில், தற்போது 83 சதவீதமாக உள்ள மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ.10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களில் இனிரூ.5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். அதேநேரம், ஆன்லைனில் செலுத்த கட்டுப்பாடு இல்லை. வழக்கம்போல டெபிட், கிரெடிட் மூலமும் கட்டணத்தை செலுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here