‘அன்பே டயா​னா’ படத்​தில் ஆங்கிலோ – இந்​திய சமூக வாழ்க்கை

0
19

பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்​கர் இசையமைத்​துள்​ளார்.

நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்​ளனர். வரும் 17ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் சிறப்பு விருந்​தினர்​களாக சமுத்​திரக்​க​னி, சசி குமார் கலந்து கொண்​டனர்.

நடிகை ரம்யா ரங்​க​நாதன் பேசும்​போது, ”இந்​தப் படத்​தில் எனது கதா​பாத்​திரம் என் திரைப்​பயணத்​தில் சிறப்​பான ஒன்​றாக இருக்கும். ஒரு நடிகை​யாக அதிக உணர்​வு​களை வெளிப்​படுத்​தும் வாய்ப்பை கொடுத்த படம் இது. டயானா கதா​பாத்​திரத்​தில் முடிந்த அளவுக்கு அர்ப்​பணிப்​புடன் நடித்​திருக்​கிறேன். இந்​தப் படம் பெரம்​பூரின் கலாச்​சா​ரத்​தை​யும், குறிப்​பாக ஆங்​கிலோ-இந்திய சமூகத்​தின் வாழ்க்கை முறையை​யும் அழகாகப் பதிவு செய்​துள்​ளது.

இது முழு​மை​யான குடும்​பப் பொழுது​போக்கு திரைப்​படம். படத்தில் ரோஜாவுடன் பணி​யாற்​றியது எனக்கு மறக்க முடி​யாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிக​வும் கம்​பீர​மாகத் தோன்​றி​னாலும், நேரில் மிக​வும் அன்​பான, இனிமை​யான மனிதர். அவருடன் நடித்த ஒவ்​வொரு நாளும் எனக்கு புதி​ய அனுபவ​மாக இருந்​தது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here