“ஆடு​களத்​தின் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத​தால் தோல்வி” – ஸ்ரேயஸ் ஐயர்

0
19

ஆடு​களத்​தின் சூழலுக்கு ஏற்ப நாங்​கள் மாறிக் கொள்​ள​வில்​லை. இதனால்​தான் இங்​கிலாந்​துக்கு எதி​ரான 5-வது டி20 போட்​டி​யில் தோல்வி கண்​டோம் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார். இந்​திய கிரிக்கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி20 போட்​டிகள், 3 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. முதலில் டி20 தொடர் நடை​பெற்று வந்​தது.

முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3-0 என்ற கணக்​கில் இங்​கிலாந்து முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 5-வது மற்​றும் கடைசி டி20 போட்டி சவுத்​தாம்ப்​டனிலுள்ள தி ரோஸ் பவுல் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இங்​கிலாந்து அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 257 ரன்​கள் குவித்​தது. பிலிப் சால்ட் 6, ஜாஸ் பட்​லர் 131, ஹாரி புரூக் 95, ஜேக்​கப் பெத்​தேல் 0, வில் ஜேக்ஸ் 7 ரன்​கள் சேர்த்​தனர்.

பின்​னர் விளை​யாடிய இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 201 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து இங்​கிலாந்து 56 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்​கில் தொடரைக் கைப்​பற்​றியது. இவ்​விரு அணி​களிடையி​லான முதல் போட்​டி​யின் மழை​யின் காரண​மாக கைவிடப்​பட்​டது.

தோல்விக்​குப் பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் அய்​யர் கூறிய​தாவது: சூழலுக்கு ஏற்ப நாங்​கள் மாறத் தவறியதே பின்​னடைவுக்கு காரணம். தோல்​வி​யில் இருந்து நான் பாடம் கற்​பேன். அயர்​லாந்​து, இங்​கிலாந்து அணி​களிடம் அனைத்து துறை​களி​லும் பின்​தங்கி விட்​டோம்.

இது​தான் இந்​தத் தொடரில் தோல்விக்கு காரணம். ஆடு​களத்​தின் சூழலுக்கு ஏற்ப நாங்​கள் எங்​களை மாற்​றிக் கொள்​ள​வில்​லை. இந்​திய அணிக்கு கேப்​டன் பொறுப்பை ஏற்​றதை எனக்கு கிடைத்த பெரு​மை​யாகவே கருதுகிறேன். இந்​திய அணிக்கு தலைமை தாங்க வேண்​டும் என்​பது ஒவ்​வொரு​வரின் கனவாகும். நிச்​சய​மாக எனக்கு அழுத்​த​மான ஆட்​டங்​களில் விளை​யாடு​வது என்​றால் பிடிக்​கும். இந்த தொடரில் இருந்து நாங்​கள் கற்​றுக்​கொள்ள வேண்​டிய விஷ​யங்​கள் நிறைய உள்​ளன. நாங்​கள் அதி​க​மான கேட்ச்​களை தவற விட்​டோம். இதுவே எங்​களுக்கு பெரும் இழப்​பாக இருந்​தது. இவ்​வாறு ஸ்ரேயஸ் அய்​யர் கூறி​னார்.

ஆட்​ட​நாயக​னாக சதமடித்த ஜாஸ் பட்​லரும், தொடர்​நாயக​னாக ஹாரி புரூக்​கும் தேர்​வா​யினர். இங்​கிலாந்து தொடருக்கு முன்​ன​தாக அயர்​லாந்​துக்கு எதி​ரான டி20 தொடரை​யும் 0-2 என்ற கணக்​கில் இந்​திய அணி இழந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

ஒரு​நாள் தொடர்

டி20 தொடர் முடிந்​துள்ள நிலை​யில், இந்​தி​யா, இங்​கிலாந்து அணி​களுக்கு இடையி​லான 3 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச ஒரு​நாள் போட்டி தொடர் வரும் 14-ம் தேதி (நாளை) தொடங்​கு​கிறது. 14-ம் தேதி பர்​மிங்​ஹாமில் முதல் போட்​டி​யும்​, 16-ம்​ தேதி ​கார்​டிஃப்​பில்​ 2-வது போட்​டி​யும்​, 19-ம்​ தேதி லண்​டன்​ லார்​ட்​ஸ்​ மை​தானத்​தில்​ 3-வது மற்​றும்​ கடைசி ஒரு​நாள்​ போட்​டி​யும்​ நடை​பெறவுள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here