கனமழை, வெள்ளம் பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

0
17

மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்​களின் மழை, வெள்​ளம், நிலச்​சரிவு பாதிப்​பு​கள் குறித்து அம்​மாநில முதல்வர்களு​டன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார்.

நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில், குறிப்​பாக மும்​பை​யில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் தாழ்​வான பகு​தி​களில் தண்​ணீர் தேங்​கி​யிருப்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

மும்​பை​யில் செவ்​வாய்க்​கிழமை சற்று நிம்​மதி கிடைத்த நிலையில், நேற்று மீண்​டும் கனமழை பெய்​த​தால், புறநகர் ரயில் சேவை​கள் தாமதமடைந்​தன. இதனால் அலு​வல​கம் செல்​லும் பொது​மக்​கள் பாதிக்​கப்​பட்​டனர். பக்​கத்து மாவட்​ட​மான பால்கரில் உள்ள வசய்​-​வி​ரார் பகு​தி​யிலும், தெற்கு குஜ​ராத்​தின் பல இடங்​களி​லும் தண்​ட​வாளங்​களில் தண்​ணீர் தேங்​கிய​தால், குஜ​ராத் நோக்​கிச் செல்​லும் தூரப் பயண ரயில் சேவை​கள் தொடர்ந்து பாதிக்​கப்​பட்​டன.

இந்த வார தொடக்​கத்​தில் போர் காட் பகு​தி​யில் ஏற்​பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மும்​பை-புனே இடையே​யான ரயில் போக்​கு​வரத்​தும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா மகாராஷ்டிரா முதல்​வர் தேவேந்திர பட்​னா​விஸை நேற்று தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு பேசி​னார்.

அப்​போது, அங்​குள்ள மழை மற்​றும் வெள்ள நில​வரம் குறித்​துக் கேட்​டறிந்​தார். அப்​போது மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்கு மத்​திய அரசின் முழு ஆதரவு இருக்​கும் என்று அவர் உறுதியளித்ததாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்​டத்​தில் சுரங்​கப்​பாதை கட்டுமானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், கனமழை பெய்​த​தால் தோண்​டப்​பட்ட மண் குன்று சரிந்து விழுந்து ஏற்​பட்ட விபத்​தில் 5 பேர் உயி​ரிழந்​தனர். அங்கு மேலும் சிலர் மாய​மான​தால் மீட்​புப் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்​து,

மத்​திய அமைச்​சர் அமித் ஷா, நேற்று கேரள முதல்​வர் வி.டி.சதீசனை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். வயநாடு சுரங்க விபத்து குறித்து மத்​திய அமைச்​சர் அமித் ஷா முதல்​வரிடம் விசா​ரித்​தார் என்​றும், மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்கு தேவை​யான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும் என்று உறுதி அளித்​தார் என்​றும் அம்​மாநில அரசு உயர்​ அதி​காரி ஒரு​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here