மணிப்பூரில் நாகா அமைப்பினர் போராட்டம்: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிப்பு

0
162

மணிப்பூரின் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் நாகா பழங்குடி கிராமங்களை நோனி மாவட்டத்துடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து மணிப்பூர் ரோங்மேய் நாகா கவுன்சில் 18-ம் தேதி போராட்டம் அறிவித்தது.

70 சிறுபான்மை நாகா பழங்குடியினர் வசித்து வரும் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக நாகா மாவட்டத்துடன் சேர்க்கமாநில அரசு தவறியதால் காலவரையற்ற முழு அடைப்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தால் மணிப்பூரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்துடன் மணிப்பூரை இணைக்கக்கூடிய லெய்மாடாக் லோக்டாக் திட்ட சாலை, தாங்ஜெய் மரில்சாலை, தேசிய நெடுஞ்சாலை-37 ஆகிய 3 முக்கிய நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளன. இந்த சாலைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு லாரிகள்வரிசையில் காத்துக்கிடக்கின்றன.இது குறித்து ரோங்மெய் நாகா கவுன்சில் மணிப்பூர் அமைப்பின் பொதுச் செயலாளர் தாய்மெய் காய்மெய் கூறும்போது, ‘‘கடந்த 18-ம் தேதி இரவிலிருந்து நடத்தப் பட்டு வரும் இந்த முற்றுகை போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி மணிப்பூர் முடங்கியுள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here