‘சுயநலமாக சிந்திக்கக் கூடாது’ – ரொனால்டோவை விமர்சித்த முன்னாள் வீரர் | FIFA WC 2026

0
20

பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று முன்​தினம் இரவு அமெரிக்​கா​வின் ஹூஸ்​டன் நகரில் ‘கே’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் போர்ச்சுகல் – காங்கோ அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது. ஆட்டத்​தின் 6-வது நிமிடத்​தில் போர்ச்​சுகலின் ஜாவோ நவெஸ் கோல் அடித்​தார்.

தொடர்ந்து முதல் பாதி ஆட்​டத்​தில் காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட நேரத்​தின் 45+5-வது நிமிடத்​தில் காங்​கோ​வின் யோவான் விஸ்ஸா தலை​யால் முட்டி கோல் அடித்​தார். கடைசி வரை போராடி​யும் போர்ச்சுகல் அணி​யி​னால் மேற்​கொண்டு கோல் அடித்து ஆட்​டத்தை வெற்​றிகர​மாக நிறைவு செய்ய முடியாமல் போனது.

இந்​தப் போட்​டி​யில் மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட போர்ச்​சுகல் அணியின் 40 வயதான நட்​சத்​திரம் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ கோலும் அடிக்​க​வில்​லை, கோல் அடிக்க உதவி​யும் செய்​ய​வில்​லை. 68, 73-வது நிமிடங்​களில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்​பு​களை கிறிஸ்டியானோ ரொனால்டோ தவற​விட்​டார். இது தற்​போது கடும் விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​துள்​ளது.

போட்​டிக்கு பிறகு தொலைக்​காட்சி ஒன்​றில் போர்ச்​சுகலின் ஆட்டத்​தைப் திறனாய்வு செய்த பிரான்ஸ் அணி​யின் முன்​னாள் வீர​ரான தியரி ஹென்றி கூறும்​போது, “ஒரு விஷ​யம் மிக​வும் முக்​கி​யம். அணி கோல் அடிக்க வேண்​டும், நீங்​கள் (கிறிஸ்டியானோ ரொனால்டோ) மட்​டுமே கோல் அடிக்க வேண்​டிய​தில்​லை.

போர்ச்​சுகல் அணி​யிடம் பந்து வரும்​போது கான்​சிலோ பந்​தைப் பெறுகிறார். அப்​போது ரொனால்டோ பலமுறை அந்த இடத்​தில் இருக்​கிறார். அரு​கில் இருக்​கும் அவர், சிறிது தூரம் ஓடி​னால், காங்கோ​வின் டிஃபெண்​டர்​கள் 6 அடி பாக்ஸ் பகு​திக்​குள் சிதற வாய்ப்​பிருக்​கிறது. ஆனால் ரொனால்டோ தான் கோல் அடிக்க வேண்​டும் என்ற காரணத்​தி​னாலே ப்ரூனோ ஃபெர்​னான்​டஸ் பாதை​யில் செல்கிறார்.

பெனால்டி பாக்​ஸுக்​குள் செல்​லும் ரொனால்டோ தனக்கு பின்​புறம் உள்ள ஃபெர்​னான்​டஸுக்கு பந்தை பாஸ் செய்தால் போது​மான​தாக இருக்​கும். எளி​தாக கோல் அடித்திருக்கலாம்” என்றார்.

காங்கோ அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ரொனால்டோ ஒட்டுமொத்​த​மாகவே 25 முறை மட்​டுமே பந்​தைத் தொட்​டார். இலக்கை நோக்கி அவர் அடித்த 3 ஷாட்​டு​களும் துல்​லிய​மான​தாக இல்​லை. மேலும் எதிரணி வீரருட​னான நேருக்கு நேர் மோதலில் ஒரே ஒரு​முறை மட்​டுமே அவர், பந்தை தட்​டிப்​பறித்​தார்.

இதன் மூலம் காங்கோ அணி​யின் தடுப்​பாட்ட வீரர்​கள் அவரை எவ்​வளவு திறம்​படக் கட்​டுப்​படுத்​தி​யுள்​ளனர் என்​பது தெளி​வாகிறது. உலகக் கோப்​பைப் போட்​டிகளில் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ தொடக்க பட்​டியலில் களம் இறங்​கிய ஆட்​டங்​களி​லேயே, மிகக் குறைந்த அளவில் அவர், பந்​தைக் கையாண்ட 2-வது போட்டி இது​வாகும்.

இது போர்ச்​சுக்​கல் அணி​யின் தாக்​குதல் ஆட்​டத்​தில் அவரது பங்​களிப்பு எவ்​வளவு குறை​வாக இருந்​தது என்​பதை எடுத்​துக் காட்டுகிறது. இந்த ஏமாற்​றம் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் தற்​போதைய ஃபார்ம் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

உலகளா​விய அரங்​கில் அவரது அனுபவ​மும் பெரு​மை​யும் இருந்​த​போ​தி​லும், பெரிய சர்​வ​தேசத் தொடர்​களில் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ தொடர்ந்து 10 போட்​டிகளாக ஒரு கோல்​ கூட அடிக்​காமல்​ தவித்​து வரு​கிறார்​ என்​ப​தே நிதர்சனமான உண்​மை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here