இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா ராஜஸ்தான்? – தகுதி சுற்று 2-ல் இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்

0
33

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெறும் தகுதி சுற்று 2-ல் முன்​னாள் சாம்​பியன்​களான ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி​யிடம் 92 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த நிலை​யில் இன்​றைய ஆட்டத்தை எதிர்​கொள்​கிறது. அந்த ஆட்​டத்​தில் கேப்​ட​னாக ஷுப்மன் கில்​லின் பல்​வேறு முடிவு​கள் விமர்​சனங்​களுக்கு வழிவகுத்​தன. குறிப்​பாக டாஸ் வென்று பேட்​டிங் செய்​யாமல் பீல்டிங்கை தேர்வு செய்​திருந்​தார்.

ஆடு​களம் ரன் குவிப்​புக்கு கடின​மாக இருந்த நிலை​யில் எளி​தான பல்​வேறு கேட்ச்​களை குஜ​ராத் அணி வீரர்​கள் தவற​விட்​டனர். இதை பயன்​படுத்​திக் கொண்ட ஆர்​சிபி கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 33 பந்​துகளில் 93 ரன்​கள் விளாசி ஆட்​டத்​தின் போக்​கையே புரட்டிப் போட்​டார். 255 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் அணியில் அழுத்​தம் காரண​மாக பவர்​பிளே​விலேயே 5 விக்கெட்களை கொத்​தாக தாரை வார்த்​த​தால் அதன் பின்​னர் மீள முடி​யாமல் போனது.

இந்த தோல்​வி​யில் இருந்து பாடம் கற்​றுக்​கொண்டு இறு​திப் போட்டிக்கு நுழைவதற்கு 2-வது முறை​யாக கிடைத்​துள்ள வாய்ப்பை குஜ​ராத் அணி பயன்​படுத்​திக் கொள்ள முயற்சிக்கக் கூடும். பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் குஜ​ராத் அணி அணி தங்களு​டைய டாப் 3 பேட்​டர்​களான ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் மற்​றும் ஜாஸ் பட்​லர் ஆகியோரையே பெரிதும் நம்​பி​யிருக்​கிறது. இவர்​கள் ரன் குவிக்​கத் தவறி​னால், போட்​டியைத் தங்​கள் பக்​கம் திருப்​பக்​கூடிய பேட்​டிங் பலம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் மிடில் ஆர்​டரிடம் இல்​லை.

பின்​வரிசை பேட்​டிங்​கும் பலன் தரக்​கூடிய​தாக இல்​லை. எனினும் கடந்த போட்​டி​யில் ராகுல் டெவாட்​டியா 43 பந்​துகளில் 68 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இது நம்​பிக்கை அளிக்​கக்​கூடும். நடப்பு தொடரில் பந்​து​வீச்சு தான் குஜ​ராத் அணி​யின் மிகப்​பெரிய பலமாக இருந்து வந்​தது. ஆனால் தரம்​சாலா​வில் ஆர்​சிபி அணிக்கு எதி​ராக நடந்த போட்​டி​யில் டெத் ஓவர்​களில் பந்​து​வீச்சு கைகொடுக்​க​வில்​லை. ஃபீல்​டிங் துறை​யிலும் டைட்​டன்ஸ் அணி பெரிய அளவில் முன்​னேற வேண்​டி​யுள்​ளது.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி எலிமினேட்​டர் ஆட்​டத்​தில் 47 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை வீழ்த்​திய உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. அந்த ஆட்​டத்​தில் 15 வயதாகும் வைபவ் சூர்​ய​வன்ஷி 29 பந்​துகளில், 12 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரிகளு​டன் 97 ரன்​கள் விளாசி மிரட்​டி​யிருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரட்​டலான மட்​டைவீச்சு வெளிப்​படக்​கூடும். எனினும் அவருக்கு முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோர் நெருக்​கடிதரக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஏனெனில் சூர்ய​வன்ஷி ஷார்ட் பாலில் விக்​கெட்டை பறி​கொடுக்​கக்​கூடியவர். இந்த பலவீனத்தை சிராஜும், ரபா​டா​வும் பயன்படுத்திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும்.

சூர்​ய​வன்​ஷி​யுடன் இணைந்து யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், தஷன் ஷனகா, டொனோவன் பெரைரா ஆகியோ​ரும் கைகொடுத்​தால் அணிக்கு கூடு​தல் பலம் கிடைக்கும். ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் கடைசி 5 ஓவர்​களில் ராஜஸ்​தான் அணி பெரிய அளவில் ரன்​கள் குவிக்​கத் தவறியது. இதனால் நடு​வரிசை பேட்​டிங்​கும், பின்​வரிசை பேட்டிங்​கும் துடிப்​புடன் செயல் பட வேண்​டியது அவசி​யம்.

பந்​து​வீச்​சில் ஜோப்ரா ஆர்ச்​சர் அதிவேகம் மற்​றும் ஸ்விங்​கால் பலம் சேர்த்து வரு​கிறார். நடப்பு தொடரில் 24 விக்​கெட்​களை வீழ்த்தி அதிக விக்​கெட்​களை வீழ்த்தி உள்ள வீரர்​களின் பட்டியலில் 3-வது இடத்​தில் இருக்​கும் ஆர்ச்​சர், குஜ​ராத் டைட்டன்ஸ் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு நெருக்​கடி கொடுக்கக்​கூடும். அவருக்கு உறு​துணை​யாக நந்த்ரே பர்​கர், பிரிஜேஷ் சர்​மா, யாஷ் ராஜ் பூனி​யா, ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் செயல்​படக்​கூடும். இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி வரும் 31-ம் தேதி அகம​தா​பாத்​தில் நடை​பெறும்​ இறு​திப்​ போட்டியில்​ ஆர்​சிபி அணி​யுடன்​ பலப்​பரீட்​சை நடத்​தும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here