குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.1,150 கோடி மதிப்பிலான கோகைன் பறிமுதல்

0
22

குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகத்​தில் கோகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக மாநில தீவிர​வாத தடுப்​புப் படை​யினருக்​குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து கடந்த செவ்​வாய்க்​ கிழமை நள்​ளிரவு துறைமுகத்துக்கு வந்த குஜ​ராத் ஏடிஎஸ் படை அதி​காரி​கள், கடலோரக் காவல் படை அதி​காரி​களு​டன் சோதனை நடத்​தினர். அப்​போது கடல் பகு​தி​யில் ஒரு கப்​பல் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்டு இருப்​ப​தைக் கண்ட அதி​காரி​கள் அந்​தக் கப்​பலில் சோதனை நடத்​தினர். அப்​போது அங்கு 6 பைகளில் 118 கிலோ எடை​யுடைய கோகைன் போதைப் பொருள் இருந்​தது தெரிய​வந்​தது. இதன் சர்வ​தேச சந்​தை​யில் இதன் மதிப்பு ரூ.1,150 கோடி​யாகும்.

இது குறித்து குஜ​ராத் போலீஸ் டிஜிபி கே.எல்​.என்​.​ராவ் கூறும்போது, “டெல்​லி​யில் வசிக்​கும் உகாண்​டா, தான்​சானியா ஆகிய நாடு​களைச் சேர்ந்த 2 பேருக்கு இந்த பொருள் கப்​பலில் வந்துள்​ளது. இது தொடர்​பாக இது​வரை 3 பேரை பிடித்து விசாரித்து வரு​கிறோம். இந்த கப்​பல் பிரேசில், பல்​வேறு லத்​தீன் அமெரிக்க நாடு​கள், மெக்​ஸிகோ, அமெரிக்​கா, கராச்சி துறைமுகம் வழி​யாக முந்த்ரா துறை​முகத்தை அடைந்​துள்​ளது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here