சீனாவின் ஏகபோக ஆதிக்கத்துக்கு போட்டியாக அமெரிக்கா, இந்தியா இடையே முக்கிய தாதுக்கள் ஒப்பந்தம்

0
23

சீனா​வின் ஆதிக்​கத்​துக்​குப் போட்​டி​யாக, முக்​கிய தாதுக்கள் மற்​றும் அரிய வகை தனிமங்​கள் குறித்த கட்​டமைப்பு ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நேற்று கையெழுத்திட்டன.

அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயண​மாக இந்​தியா வந்​திருந்​தார். இந்​தப் பயணத்​தின் இறுதி நாளான நேற்று டெல்​லி​யில் நடை​பெற்ற ‘குவாட்’ நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் ரூபியோ பங்​கேற்​றார். ஜப்​பான், ஆஸ்​திரேலி​யா, இந்​தியா ஆகிய மற்ற நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​களும் இதில் பங்கேற்றனர்.

இந்​தக் கூட்​டத்​துக்கு நடு​வே, முக்​கிய தாதுக்​கள் மற்​றும் அரியவகை தனிமங்​கள் குறித்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க கட்டமைப்பு ஒப்​பந்​தத்​தில் இந்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கரும் அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ​வும் கையெழுத்​திட்​டனர். இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் சுரங்க அகழ்​வா​ராய்ச்​சி, தாதுக்​களைப் பதப்​படுத்​துதல், சுத்​தி​கரிப்பு செய்​தல், மறுசுழற்சி மற்​றும் அதற்​கான கூட்டு நிதியுதவி உள்​ளிட்ட ஒட்​டுமொத்த விநி​யோகச் சங்​கிலி கட்டமைப்​பிலும் இரு நாடு​களும் இணைந்து செயல்பட வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

நவீன செமிகண்​டக்​டர்​கள், மின்​சார வாகன பேட்​டரி​கள், போர் விமான பாகங்​கள், மேம்​பட்ட தொலைத்​தொடர்பு சாதனங்​கள் மற்​றும் தூய்​மை​யான எரிசக்​தித் தொழில்​களுக்​குத் தேவை​யான அரிய வகை தாதுக்​களைப் பதப்​படுத்​து​வ​தில் சீனா ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. இந்​தச் சூழலில், சீனா​வுக்கு மாற்றாக ஒரு விநி​யோக வலை​யமைப்பை உரு​வாக்க இந்​தி​யா​வும் அமெரிக்காவும் இந்த முக்​கிய உத்​தி​யைக் கையாண்​டுள்​ளன.

இதுகுறித்து இந்​திய அரசு அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘‘இது ஒரு சா​தாரண வர்த்தக ஒப்​பந்​தம் அல்ல. இந்த தாதுக்​கள் எங்​கிருந்து வரு​கின்​றன, யா​ரால் பதப்​படுத்​தப்​படு​கின்​றன, இதனால் யார் பயனடைகிறார்​கள் என்​பதை முற்​றி​லும் மாற்​றியமைக்​கும் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்​கை’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார். கடந்த 2025-ல் வாஷிங்​டனில் நடந்த பிரதமர் மோடி – ட்ரம்ப் உச்சி மா​நாட்​டில் எடுக்​கப்​பட்ட அரசி​யல் முடிவுக்​கு, இந்த ஒப்​பந்​தம் ஒரு செயல் வடிவத்​தைக் கொடுத்​துள்​ளது.

இந்​தி​யா​விடம் லித்​தி​யம், கோபால்ட் மற்​றும் டைட்​டானி​யம் போன்ற அரிய தாதுக்​களின் இருப்பு அதி​க​மாக இருந்​தா​லும், அதைப் பதப்​படுத்​தும் உள்​நாட்​டுத் திறன் குறை​வாகவே உள்​ளது. இதன் மூலம் அமெரிக்​கா​வின் அதிநவீன தொழில்​நுட்​பம், நிதி முதலீடு மற்​றும் உலகளா​விய சந்தை வாய்ப்​பு​களைப் பயன்​படுத்தி இந்​தியா தனது பதப்​படுத்​தும் திறனை பலமடங்கு உயர்த்த திட்​ட​மிட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here