சட்டவிரோத குடியேற்றம்: மக்கள் தொகை மாற்றங்களை ஆராய உயர்நிலை குழு அமைத்தது மத்திய அரசு

0
20

சட்​ட​விரோத குடியேற்​றத்​தால் ஏற்​பட்​டுள்ள மக்​கள் தொகை மாற்​றங்​களை ஆராய, ஓய்​வு​பெற்ற நீதிபதி தலைமையில் மத்​திய அரசு ஒரு உயர்​நிலைக் குழுவை அமைத்துள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​ட​விரோத குடியேற்​றம், ஊடுரு​வல் மற்​றும் பிற காரணங்​களால் ஏற்​படும் அசா​தாரண மக்​கள் தொகை மாற்​றம், எந்​தவொரு நாட்​டின் நிகழ்காலத்​துக்​கும் எதிர்​காலத்​துக்​கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்​கு​கிறது. இதைக் கருத்​தில் கொண்​டு, கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்​திர தின உரை​யின்​போது, ‘மக்கள் தொகை மாற்​றம் குறித்து ஆராய உயர்​நிலைக் குழு’ அமைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறிவித்திருந்தார்.

ஓய்​வு​பெற்ற நீதிபதி..

அதன் அடிப்​படை​யில், ஓய்​வு பெற்ற நீதிபதி பிர​காஷ் பிர​பாகர் நவ்​லேகர் தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி மற்​றும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு ஆணை​யர் துர்கா சங்​கர் மிஸ்​ரா, முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி பாலாஜி ​வாஸ்​த​வா, பொருளா​தார நிபுணர் டாக்​டர் ஷாமிகா ரவி ஆகியோர் உறுப்​பினர்​களாக செயல்​படு​வார்​கள். மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் (வெளி​நாட்​டினர்​-I) இக்​குழு​வின் உறுப்​பினர் செயலாள​ராகப் பணி​யாற்​று​வார்.

இக்​குழு மதம் மற்​றும் சமூக அடிப்​படை​யில் ஏற்​பட்​டுள்ள அசாதாரண மக்​கள் தொகை மாற்​றங்​களை விரி​வாக ஆய்வு செய்து, குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் தீர்​வு​களைப் பரிந்​துரை செய்​யும். இவ்​வாறு அதில்​ கூறி​யுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here