தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் யார் யார்?

0
24

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அனைவரும் ஆளுநர் மாளிகையில் திரண்டுள்ளனர்.

அமைச்சர்கள் பட்டியல்:

1. ஸ்ரீநாத் – தூத்துக்குடி எம்எல்ஏ

2. எஸ்.கமலி – அவிநாசி

3. சி.விஜயலக்‌ஷமி – குமாரபாளையம்

4. ஆர்.வி.ரஞ்சித் குமார் – காஞ்சிபுரம்

5. வினோத் – கும்பகோணம்

6. ராஜீவி – திருவாடானை

7. பி.ராஜ்குமார் – கடலூர்

8. வி.காந்திராஜ் – அரக்கோணம்

9. மதன்ராஜ்.பி – ஒட்டப்பிடாரம்

10. ஜெகதீஸ்வரி.கே – ராஜபாளையம்

11. ராஜேஷ்குமார்.எஸ் – கிள்ளியூர்

12. விஜய்பாலாஜி.எம் – ஈரோடு கிழக்கு

13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி – ராசிபுரம்

14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ – சேலம் தெற்கு

15. ரமேஷ் – ஸ்ரீரங்கம்

16. பி.விஸ்வநாதன் – மேலூர்

17. குமார்.ஆர் – வேளச்சேரி

18. தென்னரசு.கே – ஸ்ரீபெரும்புதூர்

19. சம்பத்குமார்.வி – கோவை வடக்கு

20. முகமது ஃபர்வாஸ்.ஜே – அறந்தாங்கி

21. டி,சரத்குமார் – தாம்பரம்

22. மரிய வில்சன் – ராதாகிருஷ்ணன் நகர்

23. விக்னேஷ்.கே – கிணத்துக்கடவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆதரவுடன் கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தைக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி அதிமுக எம்எல்ஏ.க்களில் ஒரு பிரிவினரும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் 9 அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியானது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,”காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோரை தமிழக அமைச்சரவையில் இணைக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி வழங்கியுள்ளார். அவர்கள் இன்று (மே 21) அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் பெயர் இடம்பெற்றுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here