2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு: சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

0
20

சென்னை ரயில்வே கோட்​டத்​தில், நடப்பு நிதி​யாண்​டில் 2,600 கிலோ​வாட் சூரிய மின்​சக்​தியை உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டத்​தில், சூரியசக்தி உள்​கட்​டமைப்பை விரிவுபடுத்த முயற்சி எடுக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில் பரங்​கிமலை ரயில் நிலை​யம், ஆவடி​யில் உள்ள மண்டல மின்​சார இழுவை பயிற்சி மையம், ஆண்​கள் விடுதி மற்​றும் கிண்டி ரயில் நிலை​யம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 140 கிலோ​வாட் திறன் கொண்ட புதிய சூரிய சக்தி ஆலைகள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

இதன்​மூலம், ஆண்​டுக்கு சுமார் 2 லட்​சத்து 4 ஆயிரத்து 400 யூனிட்​கள் பசுமை மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதன்​மூலம், ஆண்​டுக்கு ரூ.19.21 லட்சம் சேமிக்​கப்​படும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய இணைப்​பு​களு​டன், சென்னை கோட்​டத்​தின் மொத்த சூரிய சக்தி திறன் 2,494.5 கிலோ​வாட்டை எட்​டி​ உள்​ளது. கடந்த நிதி​யாண்​டில், இக்​கோட்​டம் 23 லட்​சத்து 15 ஆயிரத்து 954 யூனிட்​கள் சூரிய சக்​தியை உற்​பத்தி செய்​து, அதன்​மூலம் ரூ.1.43 கோடி சேமிப்பை ஈட்​டி​யுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் நிலை​யங்​கள், அலு​வல​கக் கட்​டிடங்​கள், பணிமனை​கள், ஓய்​வறை​கள், நடைமேடை மேற்​கூரைகள் மற்​றும் பயிற்சி மையங்​கள் எனப் பல்​வேறு ரயில்வே வளாகங்​களில் சூரிய மின்​சக்தி உள்​கட்​டமைப்​பு​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

இதில், சென்னை சென்ட்​ரல் புதிய நடைக்​கூடம், மூர் மார்க்​கெட் காம்ப்​ளக்​ஸ், தாம்​பரம், செங்​கல்​பட்​டு, மேல்​மரு​வத்​தூர், காஞ்​சிபுரம், காட்​பாடி, திரு​வொற்​றியூர், அரக்​கோணம், ராயபுரம், ஜோலார்​பேட்​டை, கும்​மிடிப்​பூண்​டி, திரு​வள்​ளூர், திருத்​தணி, பரங்​கிமலை, ஆவடி, கிண்​டி, பேசின் பிரிட்ஜ் உள்​ளிட்ட முக்​கிய இடங்​கள் அடங்​கும்.

நடப்பு நிதி​யாண்​டில் (2026-27) 2,600 கிலோ​வாட் சூரிய மின்சக்தியை உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இந்த முயற்சி கார்​பன் உமிழ்​வைக் குறைத்​தல், எரிசக்தி பாது​காப்பு மற்​றும் பாரம்​பரிய மின் ஆதா​ரங்​களைச் சார்ந்​திருப்​ப​தைக் குறைத்​தல் ஆகிய​வற்றை நோக்​க​மாக கொண்​டது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here