பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயலாற்றுவோம்: சீமான் உறுதி

0
23

பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாக நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும் என்​று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறியிருப்பதாவது: அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் நாம் தமிழர் கட்​சிக்கு வாக்​களித்த அனை​வருக்​கும் என் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

வெற்​றி​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்​கும், பொறுப்​பேற்​க​வுள்ள விஜய் தலை​மையி​லான தமிழக வெற்​றிக்​கழக புதிய அரசுக்​கும் என்​னுடைய வாழ்த்​துகள்.

தமிழகம் எனும் தாய் நிலத்​தின் நலனுக்​காக​வும், உயர்​வுக்​காக​வும் தொடர்ச்​சி​யாக களப்​பணி​யாற்​றி, மண்​ணுக்​கும், மக்​களுக்​கு​மான ஆக்​கப்​பூர்வ மாற்று அரசி​யலை பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாய் நின்று நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

தேர்​தல் தோல்வி குறித்து கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் 2021-ம் ஆண்டு கட்சி நிர்​வாகி​கள், வேட்​பாளர்​களு​டன் கண்​கலங்​கியபடி பேசிய பழைய காணொளி பதிவு தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி பரவி வரு​கிறது.

“நான் வென்று சட்​டப்​பேர​வைக்​குள் செல்​ல​வேண்​டும் என்று எனக்கு விருப்​பமில்​லை. நாட்டை வெல்​லாமல், ஒரு சில சீட்​டு​களை வெல்​வ​தில் ஒன்​றும் ஆக போவ​தில்​லை. ஆனாலும் வென்று உள்ளே போயிருக்​கலாம். மக்​களின் குரலாக ஒலித்​திருக்​கலாம்.

இது நம் தோல்வி அல்ல. மக்​களின் தோல்​வி.” என்று அதில் சீமான் பேசி​யிருப்​பது தற்​போது நெட்​டிசன்​களிடையே பேசும்​ பொருளாகி இருக்​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here