மத்திய கிழக்கு துறைமுகங்களை தாக்குவோம்: ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை

0
24

ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க அனு​மதி வழங்​க​மாட்​டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்​களின் கட்​டுப்​பாட்​டில் மட்​டுமே இருக்​கும். சர்​வ​தேச சட்ட விதி​களுக்கு எதி​ராக அமெரிக்க ராணுவம் செயல்​பட்டு வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடு​வோம் என்று அமெரிக்கா அறி​வித்​திருப்​பது, கடல் கொள்​ளைக்கு சமம் ஆகும்.

ஈரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் பெர்​சிய வளை​கு​டா, ஓமன் கடல் பகு​தி​யில் உள்ள அனைத்து துறை​முகங்​களின் பாது​காப்பு கேள்விக் குறி​யாகும். எங்​கள் துறை​முகங்​கள் குறிவைக்​கப்​பட்​டால், மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை மிகக் கடுமை​யாக தாக்​கு​வோம். இவ்​வாறு இப்ராகிம் தெரி​வித்​தார்.

போர் மூளும் அபா​யம்: இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் நுழைந்​தால் மோச​மான விளைவு​கள் ஏற்​படும். அமெரிக்​கா, ஈரான் இடையேயான போர் நிறுத்​தம் முடிவுக்கு வந்து மீண்​டும் மிகப்​பெரிய அளவில் போர் மூளும். ஈரான் ராணுவத்​திடம் மிகப்​பெரிய போர்க்​கப்​பல்​கள் இல்​லை. ஆனால் 5,000-க்​கும் மேற்​பட்ட அதி​விரைவு போர் படகு​கள் உள்​ளன. இந்த படகு​கள் மூலம் ஈரான் ராணுவம் கொரில்லா தாக்​குதல்​களை மேற்​கொள்​ளும்.

மேலும் கடல் கண்ணி வெடிகள், ட்ரோன்​கள், ஏவு​கணை​கள் மூல​மும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படக்​கூடும். ஈரான் எல்​லை​யில் இருந்து 10 மைல் தொலைவு வரையி​லான பகு​திக்​குள் நுழை​யும் போர்க்​கப்​பல்​கள், எதிரி​களின் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்த அந்த நாட்டு ராணுவ தலைமை ஏற்​கெனவே உத்​தரவு பிறப்​பித்து உள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here