மதுரையில் ரூ.50 கோடி நகைகள் பறிமுதல்

0
24

மதுரை எஸ்​.எஸ்​.​காலனி பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் நேற்று நடத்​திய வாக​னச் சோதனை​யில், உரிய ஆவணங்​களின்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.50 கோடி மதிப்​பிலான தங்க, வெள்ளி நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர்​களுக்கு அரசி​யல் கட்​சி​யினர் பணம் மற்​றும் பொருள்​கள் வழங்​கு​வதை தடுக்​கும் வகை​யில், தேர்தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அதன்​படி, மதுரை எஸ்​.எஸ்​.​காலனி பகு​தி​யில் தேர்​தல் பறக்​கும் படையினர் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அவ்​வழி​யாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்​டனர்.

அதில், 10 பெட்​டிகளில் தங்க நகைகளும், 3 பெட்​டிகளில் வெள்ளி நகைகளும் இருந்​தது தெரிய​வந்​தது. இதன் மதிப்பு ரூ.50 கோடி என கூறப்​படு​கிறது.

இதற்கு உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால், அவை அனைத்​தும் பறி​முதல் செய்​யப்​பட்​டு, அரசு கரு​வூலத்​தில் ஒப்படைக்​கப்​பட்​டன.

இதுதொடர்​பாக வரு​மானவரித் துறை​க்​கும் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here