மத மூட நம்பிக்கையை நீதிமன்றம் வரையறை செய்யலாம்: சபரிமலை வழக்கில் நீதிபதிகள் கருத்து

0
21

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் வழிபட அனு​ம​தி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமை​யிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​சாசன அமர்வு விசா​ரிக்க தொடங்​கி​யுள்​ளது.

2-வது நாளான நேற்று மத்​திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மத வழக்​கங்​கள் மூட நம்​பிக்​கையா என்​பதை நீதி​மன்​றங்​கள் முடிவு செய்ய முடி​யாது. இந்த விவ​காரத்​தில் நீதி​மன்​றங்​களுக்கு போதிய புலமை இல்​லை. மாறாக அந்த மதத்​தின் வழி​பாட்டு ஆவணங்​களை ஆய்​வு செய்து தீர்வு காண வேண்​டும்” என வாதிட்​டார். அப்போது, நீதிபதி ஏ.அ​மானுல்​லா, “மத மூட நம்​பிக்​கையை உச்​ச நீ​தி​மன்​றம் வரையறை செய்ய முடி​யும்” என்று தெரி​வித்​தார்.

தொடர்ந்து துஷார் மேத்தா வாதிடு​கை​யில், “அரசுக்கு சொந்​த​மான கோயில்​களில் பூசா​ரி​களை நியமிக்​கும் அதி​காரத்தை அரசுக்கு வழங்க முடி​யாது. கடவுள் நம்​பிக்கை அற்ற, கடவுள் நம்​பிக்கை உள்ள அரசுகள் கூட கோயில்​களில் பூசா​ரி​களை நியமிக்க முடி​யாது. கோயில் பூசா​ரி​கள் பாரம்​பரிய​மாக நம்​பிக்கை கொண்​ட​வர்​களாக உள்​ளனர். அரசு விவ​காரங்​களில் மதம் தலை​யி​டாத​போது, மத விவ​காரங்​களில் அரசும் தலை​யிடக்​கூ​டாது. அரவிந்​தரை பின்​பற்​று​வோர் ஒரு மதப் பிரி​வின​ராக உள்​ளனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here