கோடை விடுமுறைக்கு வெளியாகும் விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’

0
105

கோடை விடுமுறைக்கு ‘இரண்டு வானம்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரண்டு வானம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது.

’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரண்டு வானம்’. இதில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு ஆகியோருடன் வேறு யாரெல்லாம் நடித்துள்ளனர் என்பதில் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒளிப்பதிவாளராக தினேஷ் கே.பாபு, இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ், எடிட்டராக சான் லோகேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ வெளியாகவுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here