மேற்கு வங்கத்தில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

0
21

மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அண்​மை​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் திருத்​தப்​பட்ட வாக்​காளர் பட்​டியலை தயாரித்​துள்​ளது. அதில் சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. எனினும் அதி​காரப்​பூர்வ இறு​திக்​கட்ட வாக்​காளர் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் இன்​னும் வெளி​யிட​வில்​லை.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 63.66 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டிருந்​தனர். இதையடுத்து மேற்கு வங்​கத்​தில் 7.66 கோடி​யாக இருந்த வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 7.04 கோடி​யாகக் குறைந்​தது.

இதைத் தொடர்ந்து நீதித்​துறை அதி​காரி​கள் நடத்​திய பரிசீலனை​யின் போது மேலும் 27.16 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டனர். இதையடுத்து மொத்​த​மாக நீக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 90.83 லட்​ச​மாக உயர்ந்​துள்​ளது.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “விரை​வில் ஒவ்​வொரு மாவட்ட அளவிலும் உள்ள வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். இந்​தப் பட்​டியலை அனை​வரும் பார்​வை​யிடும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​படும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கு​மாறு புதி​தாக யாராவது விண்​ணப்​பித்​திருந்​தால், அவர்​களின் பெயர்​கள் சட்​ட​வி​தி​களின் படி சேர்க்​கப்​படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here