சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசல்: சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான்

0
29

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பி​யான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. குவாஹாட்​டி​யில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற ராஜஸ்​தான் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. சஞ்சு சாம்​சன் 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான நந்த்ரே பர்கர் பந்​தில் போல்​டா​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் 11 பந்​துகளில், 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் போல்​டா​னார்.

இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்​ரே, நந்த்ரே பர்​கர் வீசிய பவுன்​ஸர் பந்தை விளாச முயன்​றார். ஆனால் பந்து கையுறை​யில் பட்டு விக்​கெட் கீப்​பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான் மட்​டையை சுழற்றினார். நந்த்ரே பர்​கர் வீசிய ஓவரில் மிட்விக்​கெட் திசை​யில் பவுண்​டரியை​யும், பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸரை​யும் அடித்து அசத்​தி​னார்.

மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய மேத்யூ ஷார்ட் 7 பந்​துகளில், 2 ரன்​கள் எடுத்​த நிலை​யில் சந்​தீப் சர்மா வீசிய பந்தை மிட்விக்​கெட் திசை​யில் நின்ற ஜெய்​ஸ்​வாலிடம் எளி​தாக பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார். பவர்பிளேவில் சிஎஸ்கே 41 ரன்​கள் சேர்த்​தது. 7-வது ஓவரை வீசிய ரவீந்​திர ஜடேஜா 2 விக்​கெட்​களை வீழ்த்தி சிஎஸ்கேவின் நெருக்​கடியை அதி​கரித்​தார்.

சர்ஃப​ராஸ் கான் 12 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்டரிகளு​டன் 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளை​யாட முயன்று எல்​பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்​கிய ஷிவம் துபே 3-வது பந்தை சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட நிலை​யில் கடைசி பந்தை விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் ரவி பிஷ்னோ​யிடம் கேட்ச் ஆனது. ஷிவம் துபே 4 பந்​துகளில், 6 ரன்​கள் சேர்த்தார்.

சீராக ரன்​கள் சேர்த்து வந்த கார்த்​திக் சர்மா 15 பந்​துகளில், ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரிஜேஷ் சர்மா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். ஐபிஎல் தொடரில் பிரிஜேஷ் சர்​மாவுக்கு இது முதல் விக்​கெட்​டாக அமைந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நூர் அகமது 1 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தி​லும், மேட் ஹென்றி 5 ரன்னில் ரவி பிஷ்னோய் பந்​தி​லும் நடையை கட்​டினர். ஒரு முனை​யில் விக்​கெட் சரிந்த போதி​லும் மறு​முனை​யில் சீராக ரன்​கள் சேர்த்​தார் ஜேமி ஓவர்​டன். இதனால் சிஎஸ்கே 17.1-வது ஓவரில் 100 ரன்​களை எட்​டியது.

சிறப்​பாக விளை​யாடி வந்த ஜேமி ஓவர்​டன் 36 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். முடி​வில் 19.4 ஓவர்​களில் 127 ரன்களுக்கு சிஎஸ்கே அணி ஆட்​ட​மிழந்​தது. அன்​ஷுல் கம்​போஜ் 7 ரன்​கள் சேர்த்​தார். கடைசி விக்​கெட்​டுக்கு ஜேமி ஓவர்​டன், அன்​ஷுல் கம்​போஜ் ஜோடி 33 ரன்​கள் சேர்த்​தது. ராஜஸ்​தான் அணி தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர், நந்த்ரே பர்கர், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

128 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ராஜஸ்​தான் அணி 12.1 ஒவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 128 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும், ரியான் பராக் 11 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 14 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

முன்னதாக 15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 17 பந்துகளில், 5 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும், துருவ் ஜூரெல் 9 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 18 ரன்களும் எடுத்து அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் ஆட்டமிழந்தனர். 47 பந்​துகளை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில்​ வெற்​றி பெற்​ற ராஜஸ்​தான்​ ராயல்​ அணி 2 புள்ளிகளை பெற்றது.

சஞ்சு சாம்​சன் ஏமாற்​றம்

2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து சஞ்சு சாம்​சன் தனது அணி​யின் முதல் ஆட்​டத்​தில் தொடர்ச்​சி​யாக முறையே 74, 119, 55, 55, 82*, 66 ரன்​கள் விளாசி​யிருந்​தார். ஆனால் நேற்று சிஎஸ்கே அணிக்​காக களமிறங்​கிய தனது முதல் ஆட்​டத்​தில் 6 ரன்​னில் நடையை கட்​டி​னார். ராஜஸ்​தான் அணி​யில் இருந்து சிஎஸ்​கேவுக்கு டிரேடிங் செய்​யப்​பட்​டிருந்த சஞ்சு சாம்​சன் மீது அதிக எதிர்​பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது மட்​டைவீச்சு ரசிகர்​களுக்கு ஏமாற்​ற​மாக அமைந்​தது.

தோனி இல்​லாமல்​…

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் காயம் காரண​மாக நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான தோனி களமிறங்​க​வில்​லை. தோனி விளை​யா​டா​மல் சிஎஸ்கே அணி தோல்வி அடைவது இது 5-வது முறையாகும்.

8-வது வீர​ராக 43 ரன்​கள்

ராஜஸ்​தான் அணிக்கு எதி​ராக சிஎஸ்கே அணி​யின் ஜேமி ஓவர்​டன் 8-வது வீர​ராக களமிறங்கி 43 ரன்​கள் எடுத்​தார். இதன் மூலம் சிஎஸ்கே சார்​பில் இந்த வரிசை​யில் களமிறங்கி அதிக ரன்​கள் சேர்த்த வீரர் என்ற பெருமையை பெற்​றார் ஜேமி ஓவர்​டன். இதற்கு முன்​னர் 2024-ல் டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ராக தோனி சேர்த்த 37 ரன்​களே அதி​கபட்​ச​மாக இருந்​தது.

3-வது குறைந்த ஸ்கோர்

ராஜஸ்​தான் அணிக்கு எதி​ராக நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 127 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. ராஜஸ்​தான் அணிக்கு எதி​ராக சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்து குறைந்த ரன்​களை சேர்ப்​பது இது 3-வது முறை​யாகும். இதற்கு முனனர் 2008-ல் 109 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்து இருந்​தது. 2010-ம் ஆண்டு போட்டி​யில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 125 ரன்​கள் எடுத்தது.

டக் அவுட்டில் தப்பித்த சூர்யவன்ஷி

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தை சூர்யவன்ஷி மிட்விக்கெட் திசையில் விளாசிய போது கார்த்திக் சர்மா கேட்ச்சை தவறவிட்டார். இந்த வாய்ப்பை சூர்யவன்ஷி சரியாக பயன்படுத்திக் கொண்டு சிஎஸ்கே பந்து வீச்சை வெளுத்து வாங்கி 52 ரன்கள் விளாசினார்.

15 பந்தில் அரை சதம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான வைவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த வகையில் 2023-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here