கோடைக்கால தீ விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

0
22

தமிழகத்​தில் கோடைக்​காலம் தொடங்​கி​யுள்ள நிலை​யில், அதி​கரித்து வரும் வெப்​பம் மற்​றும் வறட்​சி​யால் ஏற்​படக்​கூடிய தீ விபத்​துகளைத் தவிர்க்க பொது​மக்​கள் மற்​றும் அரசுத் துறை​யினர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரிவித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகம் முழு​வதும் கோடை வெயில் தீவிரமடைந்​துள்​ள​தால், வெப்ப அலை பாதிப்​பு​கள் மற்​றும் தீ விபத்​துகள் மூலம் உயிர்ச் சேதங்​கள் ஏற்​படும் அபா​யம் அதி​கரித்​துள்​ளது.

இதனைத் தடுக்க பொது​மக்​கள், தொழிற்​சாலைகள் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட அரசுத் துறை​கள் ஒருங்​கிணைந்து செயல்​படு​வது அவசி​ய​மாகும். வீடு​கள் மற்​றும் வணிக நிறுவனங்​களில் உள்ள மின்​சாதனங்​கள், மின்​கம்​பிகள் பாது​காப்​பாக உள்​ளனவா என்​ப​தைப் பரிசோ​திக்க வேண்​டும்.

காடுகள் மற்​றும் திறந்​தவெளி​யில் சிகரெட் துண்​டு​களை அலட்​சி​ய​மாக வீசுவதைத் தவிர்க்க வேண்​டும். முன்​னெச்​சரிக்​கை​யாக வீடு​களில் சிறிய தீயணைப்​புக் கருவி​களை வைத்​திருப்​பது சிறந்​தது.

தமிழக தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை, கோடைக்​கால சிறப்பு கண்​காணிப்பு நடவடிக்​கைகளைத் தீவிரப்​படுத்த வேண்​டும். தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் அவசர உபகரணங்​கள் தயார் நிலை​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

பொது​மக்​களுக்கு விழிப்புணர்வு முகாம்​களை நடத்​தி, அவசர உதவி எண்​களைத் தெரியப்​படுத்த வேண்​டும். அரசு மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​கள் வெப்ப அலை எச்​சரிக்​கைகளை முறை​யாக வெளி​யிட்​டு, குடிநீர் மற்​றும் மருத்​துவ முகாம்​களை ஆங்​காங்கே ஏற்​பாடு செய்ய வேண்​டும்.

ஒவ்​வொரு​வரும் பொறுப்​புணர்​வுடன் செயல்​பட்​டால் மட்​டுமே பெரும் விபத்​துகளை​யும் உயி​ரிழப்​பு​களை​யும் தவிர்க்க முடி​யும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here