ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்​ஸிஸ்

0
24

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் திரு​விழா வரும் 28-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் 3 முறை சாம்பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 29-ம் தேதி 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்தி​யன்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது. இந்த ஆட்​டம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் ஜியோஸ்​டார் சார்​பில் நடை​பெற்ற ‘கேம் பிளான்’ நிகழ்ச்​சி​யில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்​பாக தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் கேப்ட​னான பாஃப் டு பிளெஸ்​ஸிஸ் கூறிய​தாவது: கேமரூன் கிரீன் மிக​வும் திற மை​யானவர், அவரிடம் வெற்றி பெறு​வதற்​கான அனைத்​துத் தகு​தி​களும் உள்​ளன.

கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்​காக பல திறமைகளை உள்​ளடக்​கிய ஒரு முக்​கிய வீர​ராக​வும், ஆந்த்ரே ரஸ்​ஸலுக்கு இணை​யான மாற்று வீர​ராக​வும் அவர் இருப்​பார். கேமரூன் கிரீன் ஆறு அடி உயரம் கொண்ட வலு​வான வீரர். அவர், பவுன்​ஸர் மற்​றும் யார்க்கர் பந்​துகளை வீசக்​கூடிய​வர். பேட்​டிங்​கில் பந்தை மைதானத்​துக்கு வெளியே அவரால் மிக எளி​தாக அடிக்க முடி​யும், அதே சமயம் அவர், ஒரு முறை​யான பேட்​டரும் கூட. ஒட்​டுமொத்​தத்​தில் கேமரூன் கிரீன் கொல்​கத்தா அணியை சமநிலையை அடையச் செய்​கிறார்.

ஆனால், சமீப​கால​மாக அவர் சிறந்த ஃபார்​மில் இல்லை. இது ஒரு​புறம் இருக்க ஐபிஎல் தொடரில் அவர், ரூ.25.2 கோடிக்கு வாங்​கப்​பட்​டிருப்​ப​தால், அந்த ‘ப்​ரைஸ் டேக்’ அழுத்​த​மும் இருக்​கும். அவரது, தோள்​களில் பெரிய பொறுப்பு சுமத்​தப்​பட்​டுள்​ளது. அணி அவரிட​மிருந்து நிறைய எதிர்​பார்க்​கும். அவர் இதனை எப்​படி எதிர்​கொள்​கிறார் என்​ப​தைப் பார்ப்​பது சுவாரஸ்​ய​மாக இருக்​கும்.

கொல்​கத்தா அணி நிர்​வாகம் ஃபின் ஆலன், டிம்ஷெய்ஃபெர்ட் ஆகிய இரு​வரை​யும் தொடக்க வீரர்​களாக விளை​யாடும் லெவனில் சேர்க்​கும் வழியைக் கண்​டறிந்​தால், அது அந்த அணிக்கு மிக​வும் சிறப்​பான​தாக இருக்​கும். இது அவர்​களின் பேட்​டிங்கை மிக​வும் வலிமை​யாக்​கும். தற்​போதைய டி20 கிரிக்​கெட் விளை​யாடப்​படும் முறைக்​கு, இவர்​கள் இரு​வரும் இன்​னிங்​ஸைத் தொடங்​கு​வது கச்​சித​மாக இருக்​கும். இவர்​கள் இரு​வரும் முதல் பந்​திலிருந்தே அதிரடி​யாக விளை​யாடக்​கூடிய​வர்​கள்.

பேட்​டிங் வலு​வாக உள்ள நிலை​யில் வேகப்​பந்து வீச்​சுத்​துறை குறித்து கேள்வி​கள் எழுந்​துள்​ளன. சில முன்​னணி வீரர்​கள் காயம் அடைந்​துள்​ளனர். இதனால் ஏலப்​பட்​டியலில் விற்​கப்​ப​டாத வீரர்​களில் இருந்து அனுபவம் வாய்ந்​தவரை தேர்வு செய்​து, பந்​து​வீச்சு துறையை பலப்​படுத்​து​வது அவசி​யம். நான் கொல்​கத்தா அணி நிர்​வாகத்​தின் ஒரு பகு​தி​யாக இருந்​தால், ஈடன் கார்​டன் மைதான பராமரிப்​பாளரிடம் ஆடு​களத்தை சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மாக தயாரிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​வேன்.

ஏனெனில் வருண் சக்​கர​வர்த்​தி, சுனில் நரைன் போன்ற வீரர்​கள் கிடைத்​தது கொல்​கத்தா அணி செய்த பாக்​கி​யம். தற்​போதைய டி20 கிரிக்​கெட்​டில் இருக்​கும் மிகச்​சிறந்த சுழற்​பந்து வீச்​சாளர்​களில் இவர்​களும் அடங்​கு​வர். வருண் மற்​றும் நரைன் ஆகிய இரு​வருமே ஆட்​டத்​தில் ஆதிக்​கம் செலுத்​தும் சூழல் இருக்க வேண்​டும்.

அவர்​களுக்​குச் சாதகம் இல்​லாத ஆடு​களங்​களில் விளை​யாடி​னால், உங்​கள் அணி​யின் அந்த இரண்டு பீரங்​கி​களை​யும், உங்​களின் ‘சூப்​பர் பவர்’ திறனை​யும் நீங்​கள் இழக்க நேரிடும். அவர்​கள் எந்த வகை​யான ஆடு​களத்​தி​லும் சிறப்​பாகப் பந்​து​வீசி பேட்​டர்​களுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடிய​வர்​கள் தான். ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் கொல்​கத்தா வெற்றி பெற வேண்​டு​மா​னால், வருண் மற்​றும் நரைன் இரு​வரும் அதிரடி​யாக செயல்பட வேண்​டும். இந்த இரு வீரர்​களை​யும் மனதில் வைத்​தே ஆடு​களம்​ தயார்​ செய்​யப்​பட வேண்​டும்​. இவ்​வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here