வெயிலின் தாக்கத்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் உப்பு, சர்க்கரை கரைசல் விநியோக வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்

0
23

 தமிழகத்​தில் வெயில் அதி​கரித்து வரு​வ​தால், இயல்பை விட அதி​க​மான வெப்​பநிலை பதி​வாகும் என்று எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. அதனால், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளு​மாறு சுகா​தா​ரத் துறை​யினருக்கு அறி​வுறுத்​தல் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: உப்பு சர்க்​கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்​கெட்​டு​களை போதிய கொள்​முதல் செய்ய வேண்​டும். அத்​தி​யா​வசிய மருந்​துகள், ரத்த நாளங்​கள் வழியே செலுத்​தப்​படும் திரவ மருந்​துகளும் கையிருப்பு இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

ஹீட் ஸ்ட்​ரோக் எனப்​படும் வெப்ப வாத பாதிப்​புக்​குள்​ளானவர்​களுக்கு மருத்​துவ வழி​காட்​டு​தல்​களின்​படி துரித சிகிச்​சைகளை மேற்​கொள்​வதற்​கான வசதி​கள் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும்.

வெப்ப அலை பாதிப்​பு​கள் தொடர்​பான தரவு​களை​யும், விவரங்​களை​யும் சேகரித்​து, அதன் அடிப்​படை​யில் சுகா​தார குழு​வினர் செயல்பட வேண்​டும். மருந்​துகள், தடுப்​பூசிகளை சேமிப்​ப​தற்​கான குளிர்​பதன வசதிகள் ஏற்படுத்த வேண்​டும்.

அனைத்து மருத்​து​வ​மனை​கள், சுகா​தார நிலை​யங்​களி​லும் ஓஆர்​எஸ் எனப்​படும் உப்​பு, சர்க்​கரை கரைசல் விநி​யோக வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here