சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

0
22

சென்​னை​யில் தேர்தல் விதி​மீறல்​களை கண்​காணிக்க மாநக​ராட்​சி​யின் ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில், 24 மணிநேர தேர்தல் கட்​டுப்​பாட்டு அறை திறக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கத்​தின் கீழ் இயங்​கும் தேர்​தல் ஊடக கண்​காணிப்பு மையம் மற்​றும் கட்​டுப்​பாட்டு அறை, மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மையத்​தில், தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் 24 மணி நேர​மும் தீவிர​மாக கண்​காணிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, ஊடகக் கண்​காணிப்பு மையத்​தில் உள்ள தொலைக்​காட்​சிகள் மூலம் ஒளிபரப்​பப்​படும் செய்​தி​கள் மற்​றும் நிகழ்ச்​சிகள் கூர்ந்து கவனிக்​கப்​பட்​டு, தேர்​தல் நடத்தை விதி​கள் மீறப்​படு​கிறதா என்​பது பதிவு செய்​யப்​படும்.

அதே​போல், சென்னை மாவட்​டத்​துக்​குட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் கள மிறக்​கப்​பட்​டுள்ள தேர்​தல் பணி​களுக்​காக பறக்​கும் படைகள், நிலை​யான கண்​காணிப்பு குழுக்​கள் மற்​றும் வீடியோ கண்​காணிப்பு குழுக்​கள் பணி​யில் ஈடு​பட்​டு, தேர்​தல் விதி​மீறல்​கள் ஏதேனும் இருப்​பின் அவற்றை கண்​காணித்து நடவடிக்கை மேற்​கொள்​வதை மாவட்ட கட்​டுப்​பாட்டு அறை வாயி​லாக தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும்.

இதையொட்​டி, பொது​மக்​கள் மற்​றும் வாக்​காளர்​கள் தேர்​தல் தொடர்​பான புகார்​களை தெரிவிக்க 18004257012 என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் ‘சி​விஜில்’ செயலி மூலம் வரப்​பெறும் புகார்​களும் இந்த மையத்​தின் வாயி​லாகத் தீவிர​மாகப் பரிசீலிக்​கப்​பட்​டு, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட தேர்​தல் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here