ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது. இம்முறை சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் களமிறங்குகிறார். கடந்த சில சீசன்களில் அவர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார். இதனால் சிஎஸ்கே – ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் கூறும்போது, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நான் விளையாட போவது இதுவே முதல் முறை. ஆனால், களத்தில் உணர்ச்சிகள் என்னை ஆட்கொள்ள நான் அனுமதிக்கமாட்டேன். அந்த அணியில் எனது காலம் முடிந்துவிட்டது என உணர்ந்ததால்தான் அங்கிருந்து வெளியேறினேன். இப்போது நான் அவர்களுக்கு எதிராக மோதுகிறேன். இதனால் எனது சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்துவேன்” என்றார்.














