“ஒரே நேரத்தில் 3 டி20 அணிகளை களமிறக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது” – கேப்டன் சூர்யகுமார் யாதவ்

0
21

இந்​திய டி20 கிரிக்​கெட்​டின் அசைக்க முடியாத ஆதிக்​கத்​துக்​கு, உள்​நாட்​டுப் போட்​டிகள் மற்​றும் ஐபிஎல் தொடர்​களில் இருந்து இடை​வி​டாது உரு​வாகி வரும் திறமை​யான வீரர்​களே காரணம் என்று சூர்யகுமார் யாதவ் பெரு​மை​யுடன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர், பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: திறமை​யைப் பற்றிப் பேசி​னால், நம் நாட்​டில் ஐபிஎல், பிரான்​சைஸ் கிரிக்கெட், உள்​நாட்டு கிரிக்​கெட் தொடர்​கள் இருக்கின்றன. ஒவ்​வொரு ஆண்​டும் எத்​தனை வீரர்​கள் வரு​கிறார்​கள் என்​பதை பார்க்க முடி​யும். எனவே, டி20 கிரிக்​கெட்டை பொறுத்​தவரை எத்​தனை அணி​களை வேண்​டு​மா​னாலும் நம்​மால் உரு​வாக்க முடி​யும்.

திறமை என்​பது எல்​லை​யற்​றது. இரண்டு அல்​லது மூன்று அணிகளை நம்​மால் உரு​வாக்க முடி​யும். இதன் வாயி​லாக இந்​திய அணி​யின் அடித்​தளம் அவ்​வளவு வலு​வாக இருக்கிறது என்​பதை அறிய​லாம். நம்​மிடம் அவ்​வளவு பலம் இருக்​கிறது, நான் புள்​ளி​விவரங்​களுக்கு அதிக முக்கியத்​து​வம் கொடுப்​ப​தில்​லை, ஆனால் எந்​தப் போட்டியிலும் தோற்​பதை விரும்பமாட்டேன்.

ஓய்​வறை​யில் இருக்​கும் ஒவ்​வொரு வீரரும் ஒரே திசையை நோக்​கிச் செயல்​பட்​டால் மட்​டுமே, இவ்​வளவு பெரிய வெற்றி சதவீதத்தை எட்ட முடி​யும். பேட்​டிங் என்​பது 70-75 சதவீதம் எதிர்​வினை சார்ந்​தது. மீத​முள்ள 25 சதவீதம் என்பது உள்​ளுணர்​வு. அதாவது அந்த நொடி​யில் என்ன செய்ய முடிவு செய்​கிறீர்​கள் என்​பது​தான். மைதானத்துக்குள் நுழைந்​தவுடன், கிட்​டத்​தட்ட ஒரு ‘ஆட்​டோபைலட்’ முறை​யில் இருப்​போம். சூழ்​நிலைக்கு ஏற்பபேட்​டிங் செய்ய முயற்​சிக்க வேண்டும்.

துணிச்​சலாக இருப்​ப​தற்​கும், கவனக்​குறை​வாக இருப்பதற்​கும் இடையே மிக மெல்​லிய கோடு​தான் உள்ளது. நான் எப்​போதும் துணிச்​சலான பக்​கத்​திலேயே இருக்க முயற்சி செய்​கிறேன். ஆனால், ஆட்​டத்​தின் சூழ்நிலை ஒரு ஆபத்​தான ஷாட்டை விளை​யாட வேண்டும் என கோரி​னால், அதை விளை​யாடி​தான் ஆகவேண்​டும். அதிக வெகும​தி​களுக்கு அதிக ரிஸ்க் தேவைப்​படு​கின்​றன.

ஒரு​நாள் கிரிக்​கெட்டை பொறுத்​தவரை நான் உணர்​வது என்​னவென்​றால், இது ஒரே போட்​டி​யில் மூன்று வெவ்​வேறு நிலைகளில் பேட்​டிங் செய்ய வேண்​டிய ஒரு ஆட்​ட​முறை​யாகும். சில நேரங்​களில், சீக்​கிர​மாகவே களமிறங்க நேரிட்​டு, விக்​கெட்​டு​கள் வேக​மாக விழுந்​தால், டெஸ்ட் கிரிக்​கெட்டை போல நிதான​மாக விளை​யாட வேண்​டும்.

அதன்​பிறகு, ஒரு​நாள் போட்​டிக்​குரிய சரி​யான ஸ்டிரைக் ரேட்​டில் விளை​யாட வேண்​டும். இன்​னிங்​ஸின் கடைசியில் டி20 ஆட்​டத்தை போன்று அதிரடி​யாக விளையாட வேண்​டும். எனவே, இந்த ஒரு வடிவம் மட்​டும் எனக்​குப் புரிய இல்​லை. இதில் சிறப்​பாக விளை​யாட நான் எனது முழு முயற்​சி​யை​யும் எடுத்​தேன். உண்​மை​யி லேயே இது சவாலான வடிவம்.

நம் வாழ்க்​கை​யில் என்ன எழுதப்​பட்​டிருக்​கிறதோ, அது​தான் நமக்​குக் கிடைக்​கும். நான் சிவப்​புப் பந்து கிரிக்கெட்டில்​தான் எனது பயணத்​தைத் தொடங்​கினேன். சுமார் 10-12 ஆண்​டு​கள் ரஞ்சி கோப்பை போட்​டிகளில் விளை​யாடினேன். மும்​பை​யில் வளர்ந்​தால் நீங்​கள் சிவப்புப் பந்து ஆட்​டத்​தில்​தான் தொடங்​கு​வீர்​கள்.

எல்​லாமே அதைச் சுற்​றியே இருக்​கும். ஆனால் படிப்படியாக, வெள்​ளைப்​பந்து கிரிக்​கெட்விளை​யாடத் தொடங்​கிய​போது, எனது ஆர்​வம் அதன் பக்​கம் திரும்பியது. அதற்கு பிறகு​தான் டி 20 வடிவத்துக்கு வந்தேன். ஒரு​நாள் கிரிக்​கெட்​டில் சிறப்​பாக விளையாட நான் நிறைய முயற்சி செய்​தேன். ஆனால் அது கைகூடவில்​லை. டி20 ஆட்​ட​முறை எனக்​கு செட்​ ஆகிவிட்டது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here