அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்

0
23

அரசு மருத்​து​வ​மனை​யில் ஏற்​பட்ட தீ விபத்தால், பிறந்து சில மணி நேரமே ஆன பச்​சிளம் குழந்​தைக்கு தீக்​கா​யம் ஏற்​பட்​டிருக்​கும் சம்​பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை பெரம்​பூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர்​கள் ஆனந்த்​பாபு – தனலட்​சுமி தம்​ப​தி​யினர். ஆனந்த்​பாபு மருந்து பொருட்​கள் விற்​பனை செய்​யும் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வரு​கிறார்.

திரு​மண​மாகி 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில் கர்ப்​ப​மாக இருந்த தனலட்​சுமி, பிரசவ தேதி தாண்​டியதை அடுத்​து, புரசை​வாக்​கத்​தில் இயங்கி வரும் மாநக​ராட்சி 24 மணி நேர அவசர மகப்​பேறு மருத்​து​வ​மனைக்கு பரிசோதனைக்​காக நேற்று முன்​தினம் வந்​தார்.

அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், தனலட்​சுமியை உடனடி​யாக அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தி, மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

ரேடியன்ட் வார்​மர் பெட்டி

அங்கு தனலட்​சுமிக்கு நேற்று சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்​தது. பிறந்த குழந்​தையை சுத்​தம் செய்து அதன் உடல் வெப்​பநிலை​யைப் பராமரிக்க மருத்​து​வர்​கள் `ரேடியன்ட் வார்​மர்’ பெட்​டி​யில் குழந்​தையை வைத்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் வார்​மரில் ஏற்​பட்ட திடீர் மின்​கசிவு காரண​மாக, குழந்தை வைக்​கப்​பட்​டிருந்த பெட்டி தீப்​பற்றி எரி​யத் தொடங்​கியது. இதைக்​கண்டு அதிர்ச்​சி​யடைந்த அங்​கிருந்த செவிலியர்​கள் குழந்​தையை அதிலிருந்து எடுக்க முயன்​றனர்.

ஆனால் சில நொடிகளில் பரவிய தீயால், குழந்​தை​யின் முதுகு மற்​றும் தொடை பகு​தி​களில் பலத்த தீக்​கா​யங்​கள் ஏற்​பட்​ட​தாக தெரி​கிறது. பின்​னர் அந்த பெட்​டியி​லிருந்து மீட்​கப்​பட்ட குழந்தை மேல் சிகிச்​சைக்​காக எழும்​பூரில் உள்ள குழந்​தைகள் நல அரசு மருத்​து​வ​மனைக்கு எடுத்​துச் செல்​லப்​பட்​டது.

அங்கு குழந்​தை​யின் தீக்​கா​யத்​துக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த தீ விபத்து குறித்து வேப்​பேரி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

மருத்​து​வ​மனை​யில் உள்ள மின் சாதனங்​களின் தரக் கட்​டுப்​பாடு மற்​றும் பராமரிப்பு குறை​பாடே இந்த விபத்துக்​குக் காரணம் என குழந்​தை​யின் பெற்​றோரும், உறவினர்​களும் குற்​றஞ்​சாட்டி வரு​கின்​றனர்.

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்​தைக்​கு, மருத்​து​வ​மனை​யிலேயே ஆபத்து நேர்ந்​திருப்​பது பெரும் அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தியுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here