பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சமமான ஊதிய திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும்: பாரதிய மின் பொறியாளர் கழகம் வலியுறுத்தல்

0
23

பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்கு சமமான ஊதிய திருத்​தத்தை உறுதி செய்ய வேண்​டும் என, பார​திய மின் பொறி​யாளர் கழகம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்​து, பார​திய மின் பொறி​யாளர் கழகம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக, தமிழ்​நாடு மின்​வாரி​யத்​தி​லும் அதன் நிறு​வனங்​களி​லும் ஊதிய மாற்​றங்​கள் எப்​போதும் அனைத்​துப் பிரிவு ஊழியர்​களுக்​கும், அதாவது, வகுப்பு 1 மற்​றும் 2 பொறி​யாளர்​கள், அதி​காரி​கள் முதல் வகுப்பு 3 மற்​றும் 4 ஊழியர்​கள் வரை ஒரே சீராகவே நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வந்​துள்​ளன.

இருப்​பினும், இந்த நிறு​வனத்​தின் வரலாற்​றிலேயே முதல் முறை​யாக, தற்​போதைய ஒப்​பந்​தத்​தின் மூலம் பணி​யாளர்​கள் செயற்​கை​யாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் வகுப்பு 3 மற்​றும் 4 ஊழியர்​களுக்கு மட்​டுமே ஊதிய ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டு, அதே கட்​டமைப்​பிலிருந்து பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​கள் விலக்கி வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழ்​நாடு மின்​வாரிய நிறு​வனங்​களின் பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​கள், அனல் மற்​றும் புனல் மின் திட்​டங்​கள் உள்​ளிட்ட முக்​கி​யத் திட்​டங்​களைத் திட்​ட​மிட்​டுச் செயல்​படுத்​துதல் உள்​ளிட்ட பல முக்​கியப் பணி​களுக்​குப் பொறுப்​பேற்​றுள்​ளனர்.

இத்​தகைய மிக முக்​கியப் பங்​காற்​றி​னாலும், தற்​போதைய அரசின் அணுகு​முறை​யால் அவர்​களுக்கு நியாய​மான மற்​றும் அதே நேரத்​தில் கிடைக்க வேண்​டிய ஊதிய மாற்​றம் மறுக்​கப்​பட்​டுள்​ளது.

காலம் கால​மாக நடை​முறை​யில் உள்​ளது போல, அனை​வருக்​கும் ஊதிய திருத்​தம் ஒரே மாதிரி​யாக செயல்​படுத்​தப்பட வேண்​டும். ஊதிய தீர்​வு​களின் போது பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​கள் பணி​யாளர்​களிட​மிருந்து பிரிக்​கப்​படக் கூடாது.

அதே நேரத்​தில், நியாய​மான மற்​றும் சமமான ஊதிய திருத்​தம் குறித்த பொறி​யாளர்​களின் கவலைகள் நியாய​மான முறை​யில் தீர்க்​கப்பட வேண்​டும். இந்த முரண்​பாட்டை சரி செய்​து, நிறுவன நடை​முறைக்கு ஏற்ப பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்கு சமமான ஊதிய திருத்​தத்தை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு செய்​திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here