சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது டென்மார்க்கின் கிறிஸ்டியன் ஃபாஸ்ட் கேஜர், ராஸ்மஸ் கேஜர் ஜோடியுடன் மோதுவதாக இருந்தது.
ஆனால் போட்டிக்கு முன்னதாக சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டிக்கு திடீரென வலது தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதனால் கால் இறுதி சுற்றில் இருந்து சாட்விக், ஷிராக் ஜோடி விலகியது.














