வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க உதவி எண்கள்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0
28

ஈரான் மற்​றும் வளை​குடா நாடு​களில் நிலவி வரும் அசா​தாரண போர் சூழல் காரண​மாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடி​யாமல் தமிழகம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த இந்​திய மீனவர்​கள் தவித்து வரு​கின்​றனர்.

இதில் தமிழகத்​தைச் சேர்ந்த 595 பேர் அந்​நாட்​டின் வெவ்​வேறு பகு​தி​களில் சிக்​கி​யுள்​ளனர். தமிழக மீனவர்களை பாது​காப்​பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

ஈரான் மற்​றும் வளை​குடா நாடு​களில் சிக்​கி​யுள்ள சென்​னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினர் கீழே வழங்​கப்​பட்​டுள்ள அந்​தந்த நாட்டு இந்​திய தூதரக உதவி எண்​களை தொடர்பு கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறது.

அதன்​படி ஈரான் (டெஹ்​ரான்) தூதரகத்தை +98 9128109115 (வாட்​ஸ்​-அப்), +98 9128109109 மற்​றும் +98 9128109102 ஆகிய எண்​கள் மூல​மாக​வும், துபாய் மற்றும் ஐக்​கிய அரபு நாடு​களின் தூதரகத்தை +971 543090571 மற்​றும் 800 46342 ஆகிய எண்​களி​லும், சவுதி அரேபி​யா​வுக்கு (ரி​யாத் மற்​றும் ஜெட்​டா) +966 542126748, +966 536209704 ஆகிய வாட்​ஸ்​-அப் எண்​களி​லும் தொடர்பு கொள்​ளலாம்.

மேலும் இஸ்​ரேல் நாட்டு (டெல் அவீவ்) தூதரகத்​துக்கு +972 54 7520711 என்ற எண்​ணை​யும், ஓமனுக்கு (மஸ்​கட்) +968 98282270 மற்​றும் கத்​தா​ருக்கு (தோஹா) +974 55647502 ஆகிய எண்​களை​யும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

வெளி​நாடு​களில் இருந்து சென்னை அல்​லது திருச்சி விமான நிலை​யம் வழி​யாக தாயகம் திரும்ப விரும்​பும் தமிழர்​கள், தமிழக அரசின் மறு​வாழ்​வுத் துறையை தொடர்பு கொள்​ளலாம்.

இதற்​காக இந்​தி​யா​வுக்​குள் அழைக்​கக் கூடிய கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் +91 1800 309 3793 மற்​றும் வாட்​ஸ்​-அப் எண் +91 9600023645 ஆகியவை வழங்​கப்​பட்​டுள்​ளன.

நேரில் அணுகியும் உதவி பெறலாம்

மேலும், nrtchennai@tn.gov.in என்ற மின்​னஞ்​சல் முகவரி மூல​மாக​வும், சென்னை சேப்​பாக்​கம் எழில​கம் அனெக்ஸ் கட்​டிடத்​தில் உள்ள ‘குடி​யுரிமை பெறாத தமிழர்​களின் மறு​வாழ்வு மற்​றும் நல ஆணை​யரகத்​தை’ நேரில் அணுகி​யும் உதவி​களைப் பெறலாம்.

இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்​. சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளியிட்ட செய்​திக் குறிப்​பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here