கால்பந்தில் காவல் துறை ஆட்டம் டிரா

0
22

சென்னை கால்​பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்​டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை அணி, ஏஜிஓஆர்சி அணியுடன் மோதி​யது.

இந்த ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது. ஏஜிஓஆர்சி அணி சார்​பில் 30-வது நிமிடத்தில் கப்​மின்​லால் கோல் அடித்​தார். தமிழக காவல்துறை அணி தரப்​பில் 74-வது நிமிடத்​தில் கணேசமூர்த்தி கோல் அடித்து அசத்​தி​னார். இந்த ஆட்டத்தில் சிறந்த வீர​ராக தமிழக காவல்​துறை அணியை சேர்ந்த பால​முரு​கன் தேர்​வா​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here