மூத்த பத்திரிகையாளர் பிடிஐ ராமசாமி காலமானார்: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

0
21

மூத்த பத்​திரி​கை​யாளர் பிடிஐ ராமசாமி, சென்​னை​யில் கால​மா​னார். அவரது மறைவுக்கு முதல்​வர் உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் முன்​னாள் மண்டல மேலா​ள​ரும், மூத்த பத்​திரி​கை​யாள​ரு​மான எஸ்​.​ராம​சாமி (74), சென்​னை​யில் உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார்.

பத்​திரி​கை​யாளர் வட்​டாரங்​களில் ‘எஸ்​.ஆர்’ என்று அழைக்​கப்​பட்ட இவர், 1978-ம் ஆண்டு பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் இணைந்​து, 30 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய​வர்.

திமுக, அதி​முக உள்​ளிட்ட கட்​சிகளின் அரசி​யல் நகர்​வு​களை பதிவு செய்​தவர். மறைந்த முன்​னாள் முதல்​வர்​கள் எம்​ஜிஆர், ஜெயலலி​தா, கருணாநிதி மற்​றும் மூத்த தலை​வர்​களான ஜி.கே.மூப்​ப​னார் ஆகியோ​ருடன் தனிப்​பட்ட முறை​யில் நட்​புறவு கொண்​டிருந்​தவர்.

அரசி​யல் வட்​டாரத்​தில் இவர் பிடிஐ ராம​சாமி என்றே அறியப்​பட்​டார். இவருக்கு மனை​வி​யும், ஒரு மகளும் உள்​ளனர். ராம​சாமி​யின் இறு​திச் சடங்​கு​கள் பெசன்ட்​நகரில் இன்று நடை​பெறுகிறது.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், பிடிஐ செய்தி நிறு​வனத்​தின் மூத்த பத்​திரி​கை​யாளர் ராம​சாமி மறைவெய்​திய செய்​தி​யறிந்து மிக​வும் வருந்​தினேன்.

பிடிஐ ராம​சாமி என்று அழைக்​கப்​படும் அளவுக்கு தமிழகத்​தில் பிடிஐ நிறு​வனத்​தின் அடை​யாள​மாகவே மாறிப்​போ​னார். அவரது மறைவு ஊடகத்​துறைக்கு பேரிழப்​பாகும் என தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, பாமக தலை​வர் அன்​புமணி, தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை ஆகியோ​ரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here