“அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்கள் பயப்படுவதை பார்க்க விரும்புகிறோம்” – திலக் வர்மா

0
26

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான சூர்​யகு​மார் யாதவ் தலைமையிலான இந்​திய அணி 72 ரன்​கள் வித்தியாசத்தில் ஜிம்​பாப்வே அணியை தோற்​கடித்​தது.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் விளை​யாடிய இந்​திய அணி 256 ரன்​கள் குவித்து மிரட்​டி​யிருந்​தது. அபிஷேக் சர்மா 55, ஹர்​திக் பாண்​டியா 50, திலக் வர்மா 44, இஷான் கிஷன் 38, சூர்யகுமார் யாதவ் 33, சஞ்சு சாம்​சன் 24 ரன்​கள் விளாசினர்.

போட்டி முடிவடைந்​ததும் திலக் வர்மா கூறிய​தாவது: ஓர் அணி​யாக நாங்​கள் ரன்​கள் குவிப்​பதை விரும்​பு​கிறோம். பவர்​பிளே​வில் 3 அல்​லது 4 விக்​கெட்​டு​களை இழந்​தா​லும், அதிரடி​யாக விளை​யாடும் அணுகு​முறையை மாற்​றக்​கூடாது என ஆலோ​சித்​துள்​ளோம். அதனால், விக்கெட்டுகள் சரிந்​தா​லும் அதிரடி​யாகவே விளையாடுவோம்.

தொடக்க வீரர்​கள் நல்ல துவக்​கம் கொடுத்​தால், அந்த நம்பிக்கை மூன்​றாம், நான்​காம், ஐந்​தாம் வரிசை பேட்​ஸ்​மேன்​களுக்​கும் தொடரும். அந்த வகை​யில் சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி இருந்​தார். இதுகுறித்து நாங்​கள் ஓர் அணி​யாக விவா​தித்​தோம்.

எதிரணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் பயப்பட வேண்​டும் என நாங்​கள் விரும்​பு​கிறோம். எங்​களது பேட்​ஸ்​மேன்​கள் ஒவ்வொரு பந்​தை​யும் அடிக்​கத் தயா​ராக இருக்​கிறார்​கள் என்​பதை அவர்​கள் உணர வேண்​டும். ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டிக்கு முன்​பாக, சிறந்த மனநிலை​யுடன் போட்​டி​யில் விளை​யாட வேண்​டும் என ஆலோ​சனை மேற்​கொண்​டோம்.

கடந்த ஓராண்​டாக டி 20 கிரிக்​கெட்​டில் நாங்​கள் எவ்​வாறு விளை​யாடினோம் என்​ப​தைப் வீடியோ​வில் பார்த்​தோம். அதன் பிறகு​தான் எங்​கள் அனை​வருக்​கும் நம்​பிக்கை வந்​தது. நாங்​கள் ஒரு குழு​வாக அதைப் பற்றி விவா​தித்​தோம்.

போட்​டி​யின் சூழ்​நிலை என்​ன​வாக இருந்​தா​லும் கடந்த ஓராண்​டாக நாம் எவ்​வாறு விளை​யாடினோம் என்​பதை நினைத்​துப் பாருங்​கள் என பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் எங்​களிடம் கூறி​னார். ஆட்​டத்​தின் சூழ்​நிலை எப்​படி இருந்​தா​லும் தனிப்​பட்ட வீர​ராக களத்​துக்​குள் புன்​னகைத்​த​படி அனுப​வித்து விளை​யாட வேண்​டும் என அறி​வுரை வழங்​கி​னார்.

அகம​தா​பாத், டெல்லி ஆடு​களங்​களும் நன்​றாகவே இருந்​தன. ஆனால் இது ஒரு வேடிக்​கை​யான விளை​யாட்​டு. எனவே மனநிலை மிக​வும் முக்​கிய​மானது. ஒரு விக்​கெட் விழுந்​தால், பெரிய ஷாட்​களை விளை​யாடு​வதற்கு சிறிது நேரத்தை எடுத்​துக்​கொள்​ளலாம் என்ற மனநிலை எங்​களுக்​குள் இருந்​தது.

கடந்த தொடரிலும் அதற்கு முன்​பும் நாங்​கள் அதே அணி​யாகவே விளை​யாடி வரு​கிறோம். அந்த நேரத்​தில் நாங்​கள் மகிழ்ச்​சி​யாக இருந்​தோம், முன்பு எவ்​வளவு அழுத்​தம் இருந்​தா​லும், அதை எதிரணி​யின் பந்து வீச்​சாளரிடம் கடத்​தினோம். விக்​கெட் விழுந்​தால், அடுத்த பந்​தில் 6 ரன்​கள் எடுப்​போம்.

முதல் பந்து விளாசுவதற்​கான வகை​யில் இருந்​தால் விளாச வேண்​டும் என்று நாங்​கள் விவா​தித்​தோம். இவ்​வாறு திலக்​ வர்​மா கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here