‘பாகிஸ்​தானுக்கு சர்​வ​தேச நிதியம் வழங்​கிய நிதியை விட காஷ்மீர் வளர்ச்​சிக்​கான பட்ஜெட் 2 மடங்கு அதி​கம்’

0
14

ஐ.நா. மனித உரிமை கவுன்​சிலின் 61-வது கூட்டத்​தில் காஷ்மீர் விவ​காரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்​களை கூறியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகை​யில் இந்​திய பிர​தி​நிதி அனுபமா சிங் பேசி​ய​தாவது: காஷ்மீரில் கடந்​தாண்டு திறக்​கப்​பட்ட உலகின் மிக உயர​மான ரயில் பாலம் போலி என்​றால், பாகிஸ்​தான் மாயா ஜால உலகில் இருப்​பது போல் உள்​ளது. பொறாமை காரண​மாக பாகிஸ்​தான் தொடர்ச்​சி​யாக பொய் தகவல்​களை பரப்​பு​கிறது. காஷ்மீரின் வளர்ச்​சிக்​கான பட்​ஜெட், பாகிஸ்​தானை நிதி நெருக்​கடி​யில் இருந்து மீட்க சர்​வ​தேச நிதி​யம் (ஐஎம்​எப்) வழங்​கிய நிதியை விட 2 மடங்​குக்கு மேல் அதி​கம்.

ஜம்மு காஷ்மீர் எப்​போதும் இந்​தி​யா​வின் ஒருங்​கிணைந்த பகு​தி​தான். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மட்​டும்​தான் நிலு​வை​யில் உள்ள பிரச்​சினை. இங்​கிருந்து பாகிஸ்​தான் வெளி​யேற வேண்​டும். காஷ்மீர் நடை​பெற்ற தேர்​தலில் வாக்​குப்​ப​திவு சதவீதம், மக்​கள் தீவிர​வாதம் மற்​றும் வன்​முறை கொள்​கையை நிராகரித்​துள்​ளதற்கு சான்​றாக உள்​ளது. ஆனால், இங்கு தீவிர​வாதத்தை பரப்​பும் முயற்​சி​யில் பாகிஸ்​தான் ஈடு​படு​கிறது.

காஷ்மீர் அரசி​யல், பொருளா​தாரம், சமூக ரீதி​யாக​ வளர்ச்சி அடைந்து வரு​கிறது. எனவே, பாகிஸ்​தான் உள்​நாட்டு பிரச்​சினை​களில் கவனம்​ செலுத்தட்டும். இவ்​வாறு அனுப​மா சிங்​ பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here