விளையாடும் லெவனில் சஞ்சு சாம்​சனுக்கு இடமா? – பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் விளக்கம்

0
22

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் இன்று நடை​பெறும் சூப்​பர் 8 ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, ஜிம்​பாப்​வே​யுடன் மோதுகிறது.

இதையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான சிதான்ஷு கோடக் கூறிய​தாவது: உடல் நலம் பாதிக்​கப்​பட்ட பின்​னர் அபிஷேக் சர்​மா​விடம் உத்​வேகம் இல்​லை. ஆனால் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக அவர், சிறப்​பாகவே இருந்​தார்.

எனினும் தனிப்​பட்ட வீரர் குறித்து அதி​கம் சிந்​திப்​பதை நான் விரும்​புவது இல்​லை. தனிப்​பட்ட வீரர் குறித்து நாங்கள் கவனம் செலுத்​தி​னால் அது அவருக்கு அழுத்தத்தை உரு​வாக்​கும். அபிஷேக் சர்மா 30 பந்​துகளில் 80, 70, 90 ரன்​களை விளாசும் போதும் 40, 50 பந்​துகளில் 100 ரன்​களை விளாசும் போதும் யாரும் அதை பற்றி விவாதிக்க​வில்​லை.

அவரை நல்ல மனநிலை​யில் வைத்​திருப்​பது எங்​கள் வேலை. அவர் மீண்​டும் பந்தை அடிக்க ஆரம்​பித்​தவுடன், பழைய அபிஷேக்​கைப் பார்ப்​பீர்​கள். அடுத்த போட்​டி​யில் அவர், அதைச் செய்​வார் என்று யாரும் உத்​தர​வாதம் அளிக்க முடி​யாது. எனினும் அது வெகு தொலை​வில் இல்லை.

இந்​திய அணி​யில் மாற்​றங்​கள் இருக்​கலாம். ஏனென்​றால் 2 இடது கை வீரர்​கள் தொடக்க வீரர்​களாக உள்​ளனர், மூன்றாவது இடத்​தி​லும் இடது கை வீரர் உள்​ளார். மேலும் எதிரணி​யினர் தொடக்​கத்​தில் பந்​து​வீச்சு சுழற்​பந்து வீச்சாளர்​களை பயன்​படுத்​துகின்​றனர்.

தனிப்​பட்ட முறை​யில் அதில் எந்த பிரச்​சினை​யும் இருப்பதாக நான் நினைக்​க​வில்​லை, ஆனால் கடைசி ஆட்டத்​தில் நாங்​கள் தோற்​றோம். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்​தோம். இதனால் எந்த அணி​யாக இருந்தா​லும் யோசிக்​கவே செய்​யும்.

நாங்​கள் அணியை ஒரு​போதும் முன்​கூட்​டியே முடிவு செய்வது இல்​லை. மேலும் எங்​களது திட்​டங்​களை வெளிப்படை​யாக கூற​வும் முடி​யாது. ஆனால் ஆலோசனை செய்​துள்​ளோம். சஞ்சு சாம்​சன், முதல் வலையில் பயிற்சி செய்​தார். இதை அவர், அணி​யில் இடம் பெறு​வதற்​கான அறிகுறி​யாக கருத​முடி​யாது.

திலக் வர்மா பேட்​டிங் குறித்​தும் நாங்​கள் கவலைப்படவில்லை. ஆட்​டத்​தின் சூழ்​நிலைக்கு தகுந்தவாறு அவர், பேட்​டிங் செய்​கிறார். 34 முதல் 35 ரன்களை அவர், 30 அல்​லது 32 பந்​துகளில் சேர்க்​கிறார். ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் அடித்​தால் அவர், அங்​கிருந்து முன்னேற்​றம்​ காண்​பார்​. இவ்​வாறு சிதான்ஷு கோடக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here