T20 WC 2026: இந்​தி​யா​வுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா?

0
13

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் தற்​போது பரபரப்​பான கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. தற்​போது சூப்​பர் 8 சுற்று போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. இந்த சுற்​றில் கலந்து கொண்​டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன.

குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்​பிய​னான சூர்யகுமார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்​கா​விடம் வீழ்ந்​திருந்​தது. அதேவேளை​யில் இதே பிரி​வில் உள்ள இரு முறை சாம்​பியனான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 107 ரன்​கள் வித்தியாசத்​தில் ஜிம்​பாப்வே அணியை தோற்​கடித்​தது.

இதன் மூலம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 5.350 நிகர ரன் ரேட்​டுடன் 2 புள்​ளி​களை பெற்று முதலிடத்​தில் உள்​ளது. அதிக அளவி​லான நிகர ரன்ரேட்டை கொண்​டுள்​ள​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி அரை இறு​திக்கு முன்​னேறுவதற்கு எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களில் ஒன்​றில் வெற்றி பெற்​றாலே போது​மான​தாக உள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது 2-வது ஆட்​டத்​தில் நாளை (26-ம் தேதி) தென் ஆப்​பிரிக்​காவை சந்​திக்​கிறது. தொடர்ந்து கடைசி ஆட்​டத்​தில் மார்ச் 1-ம் தேதி இந்தியாவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்​திய அணிக்கு எதி​ராக பெரிய அளவி​லான வெற்​றியை பதிவு செய்த தென் ஆப்​பிரிக்க அணி 3.800 நிகர ரன் ரேட்​டுடன் 2 புள்​ளி​களை பெற்று 2-வது இடத்​தில் உள்​ளது.

இந்​திய அணி அரை இறு​திக்கு முன்​னேற வேண்டுமானால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் அதிக அளவி​லான ரன் ரேட் வித்​தி​யாசங்​களு​டன் வெற்றி பெற வேண்​டும். மேலும் தென் ஆப்​பிரிக்க அணி தனது எஞ்​சிய 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற வேண்​டும்.

இது நிகழ்ந்​தால் அந்த அணி 6 புள்​ளி​களு​டன் அரை இறுதி சுற்​றில் நுழை​யும். முக்​கிய​மாக அந்த அணி மேற்கு இந்தியத் தீவு​களை பெரிய அளவி​லான வித்​தி​யாசத்​தில் தோற்​கடிக்க வேண்​டும்.இது நிகழ்ந்​தால் மட்​டுமே இந்​திய அணிக்​கான வாய்ப்பு திறக்கும்.

ஒரு​வேளை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, தென் ஆப்பிரிக்​காவை தோற்​கடித்​தால் இந்​திய அணி​யின் நிலைமை சிக்​கலாகி​விடும். மேற்கு இந்​தி​யத் தீவுகள் வெற்றி பெற்​றால் அந்த அணி ஏறக்​குறைய அரை இறுதி வாய்ப்பை பெற்​று​விடும்.

தென் ஆப்​பிரிக்க அணி தனது கடைசி ஆட்​டத்​தில் ஜிம்பாப்வே அணியை வென்​றால் இந்​திய அணி​யின் நிலைமை மேலும் சிக்​கலாகும். தற்​போது இந்​திய அணி​யின் நிகர ரன்​ரேட் -3.800 ஆக உள்​ளது. இந்​திய அணி தனது கடைசி 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்​றாலும் நிகர ரன்​ரேட்டே அரை இறு​திக்கு முன்​னேறு​வதை தீர்​மானிக்​கும் முக்​கிய காரணி​யாக இருக்​கும். வாய்​ப்​பை பெற முடி​யும்​. அந்​த அணி இந்​திய அணி​யுடன்​ ​நாளையும்​, தென்​ ஆப்​பிரிக்​காவுடன்​ வரும்​ ​மார்​ச்​ 1-ம்​ தேதியும்​ மோதுகிறது.

சேப்​பாக்​கத்​தில் அனிருத்​தின் இசை நிகழ்ச்சி

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இந்திய அணி நாளை (26-ம் தேதி) ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு முன்னதாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ரிங்கு சிங் இல்லை

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இந்​திய அணி தனது 2-வது ஆட்​டத்​தில் நாளை ஜிம்​பாப்வே அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது.

இதையொட்டி இந்​திய அணி வீரர்​கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடு​பட்​டனர். இதில் ரிங்கு சிங் பங்கேற்கவில்லை. அவர், அவசர​மாக நொய்டா சென்றுள்ளார். ரிங்கு சிங்​கின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here