15-வது மினி தேசிய ரோல்பால் போட்டி: மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன்

0
31

15-வது மினி தேசிய ரோல்பால் சாம்​பியன்​ஷிப் போட்டி திருச்சி கே.கே. நகரில் நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, குஜ​ராத் உள்​ளிட்ட 20 மாநிலங்​களை சேர்ந்த 11 வயதுக்​குட்​பட்ட சிறு​வர், சிறுமியர் அணி​கள் கலந்து கொண்டு விளை​யாடின.

நேற்று நடை​பெற்ற இறு​திப்​போட்​டி​யில் சிறுமியர் பிரி​வில் தமிழ்​நாடு அணி 2-1 என்ற கோல் கணக்​கில் ஒடி​சாவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. சிறு​வர் பிரி​வில் தமிழ்​நாடு அணி 6 – 7 என்ற கோல் கணக்​கில் அசாம் அணி​யிடம் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்​தது.

திருச்சி வேலம்​மாள் போதி கேம்​பஸில் நடை​பெற்ற பரிசளிப்பு விழா​வில் தமிழ்​நாடு காவல்​துறை மத்​திய மண்டல ஐ.ஜி பால​கிருஷ்ணன், இந்​திய ரோல்​பால் சம்​மேளன செய​லா​ளர் பிர​தாப் பகர், தென்​னிந்​திய ஒருங்​கிணைப்​பாளர் சுப்​ரமணி​யம், தமிழ்​நாடு ரோல் பால் சங்க பொதுச்​செய​லா​ளர் கோவிந்​த​ராஜ் ஆகியோர் பங்​கேற்று வெற்றி பெற்​றவர்​களுக்கு கோப்பை மற்​றும் பதக்​கங்​களை வழங்கி பாராட்​டினர்.

தமிழ்​நாடு ரோல் பால் சங்க துணைத் தலை​வர்​கள் சரவணன், பிரேம்​நாத், பொருளாளர் ராஜசேகர் உள்​ளிட்ட பலர் கலந்துகொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here