டாக்கா தொகுதியிலிருந்து இந்து சமுதாயத்தைச் சேர்ந்த காயேஷ்வர் சந்திர ராய் வெற்றி!

0
10

வங்​கதேசத் தேர்​தலில் பிஎன்பி கட்​சி மூத்த தலை​வரும், இந்து மதத்​தைச் சேர்ந்​தவரு​மான காயேஷ்வர் சந்​திர ராய் போட்​டி​யிட்​டார். டாக்​கா-3 தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அவர் மொத்​தம் 99,163 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். இவர் வங்​கதேச முன்​னாள் அமைச்​சர் ஆவார்.

வங்​கதேசத்​தில் கடந்த சில மாதங்​களாக இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடை​பெற்று வரும் வேளை​யில், சிறு​பான்​மை​யின​ராக இருக்​கும் இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர் தலைநகர் டாக்​கா​வில் உள்ள தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருப்​பது அனை​வருக்​கும் ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

ஜமாத்​-இ-இஸ்​லாமி கட்​சியின் கிருஷ்ணா நந்தி என்ற வேட்​பாளர் இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here