T20 WC 2026: அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா

0
23

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று ‘பி’ பிரிவில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, அயர்​லாந்​துடன் மோதியது. கேப்​டன் மிட்​செல் மார்ஷ் காயம் காரண​மாக களமிறங்​க​வில்​லை. இதனால் ஆஸ்​திரேலிய அணி டிராவிஸ் ஹெட் தலை​மை​யில் விளை​யாடியது.

முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்​கள் குவித்​தது. ஜோஷ் இங்​லிஷ் 17 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​களும் கேமரூன் கிரீன் 11 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்​களும், மேட் ரென்ஷா 33 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​களும் சேர்த்​தனர்.

ஆல்​ர​வுண்​ட​ரான மார்​கஸ் ஸ்டோனிஸ் 29 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் விளாசி​னார். கூப்பர் கானொலி 11, சேவியர் பார்ட்​லெட் 11 ரன்​கள் சேர்த்தனர். முன்​ன​தாக டிரா​விஸ் ஹெட் 6, கிளென் மேக்​ஸ்​வெல் 9 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தனர்.

அயர்​லாந்து அணி தரப்​பில் மார்க் அடேர் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 183 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த அயர்லாந்து அணி நேதன் எல்​லிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோரது பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 16.5 ஓவர்​களில் 115 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜார்ஜ் டாக்​ரெல் 29 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரிகளு​டன் 41 ரன்​கள் விளாசி​னார்.

லார்​கன் டக்​கர் 24, ராஸ் அடேர் 12, மார்க் அடேர் 12, கரேத் டெலானி 11 ரன்​கள் சேர்த்​தனர். ஹாரி டக்​டர் 0, கர்​திஷ் கேம்​பர் 4, பென் கலிட்ஸ் 2, பார்ரி கார்த்தி 2 ரன்​களில் நடையை கட்​டினர். கேப்​டன் பால் ஸ்டிர் லிங் ஒரு ரன் எடுத்த நிலை​யில் காயம் காரண​மாக வெளி​யேறி​னார். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் நேதன் எல்​லிஸ் 3.5 ஓவர்களை வீசி ஒரு மெய்​ட​னுடன் 12 ரன்​களை வழங்கி 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

ஆடம் ஸாம்பா 4 ஓவர்ளை வீசி 23 ரன்​களை விட்டுக்கொடுத்து 4 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 67 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை வெற்​றிகர​மாக தொடங்​கியது. அந்த அணி தனது 2-வது ஆட்​டத்​தில் நாளை (13-ம் தேதி) ஜிம்​பாப்​வே​யுடன் மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here