17 நாடுகள் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் இன்று சென்னையில் தொடக்கம்

0
21

டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்​னையை அடுத்த மேலக்கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​கல்​வியியல் மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தில் இன்று (10-ம் தேதி) தொடங்​கு​கிறது.

இதில் 17 நாடு​களைச் சேர்ந்த 80-க்​கும் மேற்​பட்ட வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். இவர்​கள் ஆடவர் ஒற்​றையர், மகளிர் ஒற்​றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்​டையர், கலப்பு இரட்​டையர் ஆகிய பிரிவு​களில் நடை​பெறும் போட்​டிகளில் பங்​கேற்க உள்​ளனர்.

ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் மானவ் தாக்கர், மனுஷ் ஷா ஜோடிக்கு போட்​டித் தரவரிசை​யில் முதலிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதேவேளை​யில் கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் தியா சித்​தலே, மானுஷ் ஷா ஜோடிக்கு முதலிடம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆடவர் ஒற்​றையர் பிரிவுப் போட்​டி​யில் முதல் 16 வீரர்களில் இந்​தி​யா​வின் மானவ் தாக்​கர், மானுஷ் ஷா மற்​றும் சத்தியன் ஞான​சேகரன் இடம் பெற்​றுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரி​விலும் தியா சித்​தலே விளை​யாட உள்ளார். இந்த பிரி​வில் அவரது ஜோடி​யாக யஷஸ்​வினி கோர்​படே களமிறங்​கு​கிறார். இந்​தத் தொடரில் இந்தியாவில் இருந்து 27 வீரர், வீராங்​க​னை​கள் களமிறங்குகின்​றனர். பிர​தான சுற்​றில் அறு​பதுக்​கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here