இங்கிலாந்திடம் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது நேபாளம்!

0
19

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரி​வில் உள்ள 2 முறை சாம்​பிய​னான இங்கிலாந்​து, கத்​துக்​குட்​டி​யான நேபாளத்​துடன் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்​கள் இழப்​புக்கு 184 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக ஜேக்​கப் பெத்​தேல் 35 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும் கேப்​டன் ஹாரி புரூக் 32 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்​ளும் சேர்த்​தனர். இந்த ஜோடி 4-வது விக்​கெட்​டுக்கு 71 ரன்​கள் சேர்த்​தது.

இறுதிக்கட்டத்தில் மட்​டையை சுழற்​றிய வில் ஜேக்ஸ் 18 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 39 ரன்​கள் விளாசி​னார்.முன்​ன​தாக பில் சால்ட் 1 ரன்​னில் நடையை கட்​டி​னார். மற்றொரு தொடக்க வீர​ரான ஜாஸ் பட்​லர் 17 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார்.

டாம் பேன்​டன் 2, சேம் கரண் 2 ரன்​களில் நடையை கட்​டினர். நேபாளம் அணி சார்​பில் தீபேந்​திர சிங் ஐரி, நந்​தன் யாதவ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 185 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நேபாளம் அணிக்கு குஷால் புர்​தேல் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். இதனால் 3 ஓவர்​களில் 31 ரன்​கள் விளாசப்​பட்​டன.

மற்றொரு தொடக்க வீர​ரான ஆசிஃப் ஷேக் 7 ரன்​களில் லியாம் டாவ்​சன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அதிரடி​யாக விளை​யாடிய குஷால் புர்​தேல் 17 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​கள் எடுத்த நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்​தில் அவுட் ஆனார். பவர்​பிளே​வில் நேபாளம் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 47 ரன்​கள் எடுத்​தது.

இதன் பின்​னர் கேப்​டன் ரோஹித் பவுடெல், தீபேந்​திர சிங் ஐரி ஜோடி சீராக ரன்​கள் சேர்த்து இங்​கிலாந்து பந்துவீச்சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுத்​தது. இந்த ஜோடியின் சிறப்​பான ஆட்​டத்​தால் நேபாளம் அணி 12 ஓவர்​களில் 101 ரன்​கள் குவித்​தது. 82 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை சாம் கரண் பிரித்​தார்.

தீபேந்​திர சிங் ஐரி 29 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் எடுத்த நிலை​யில் சேம் கரண் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். லியாம் டாவ்​சன் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் பவுடெல் வெளி​யேறி​னார். ரோஹித் பவுடெல் 34 பந்​துகளில், 2 சிக்ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்​தார்.16 ஓவர்​களில் நேபாளம் அணி 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 129 ரன்​கள் எடுத்​தது.

அந்த அணி​யின் வெற்​றிக்கு கடைசி 4 ஓவர்​களில் 56 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் லோகேஷ் பாம் 2 பவுண்​டரி​களை விளாசி​னார். இந்த ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கக்​கப்​பட்​டன. ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஆரிஃப் ஷெய்க் அடுத்த பந்​தில் விக்கெட் கீப்​பர் ஜாஸ்​பட்​லரிடம் பிடி​கொடுத்து வெளியேறி​னார்.

8 பந்​துகளை சந்​தித்த ஆரிஃப் ஷெய்க் 10 ரன்​கள் சேர்த்​தார். இதே ஓவரில் லோகேஷ் பாம் 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்டு அசத்​தி​னார். இதனால் இந்த ஓவரில் 22 ரன்​கள் விளாசப்​பட்​டன. கடைசி 2 ஓவர்​களில் நேபாள அணி​யின் வெற்​றிக்கு 24 ரன்கள் தேவை​யாக இருந்​தது. லூக் வுட் வீசிய 19-வது ஓவரில் முதல் 2 பந்​துகளை லோகேஷ் பாம் பவுண்​டரிக்கு விரட்​டி​னார். முதல் 5 பந்​துகளில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்ட நிலை​யில் கடைசி பந்​தில் குல்​ஷன் ஜா (1) போல்​டா​னார்.

இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு அதி​க​மானது. சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்​றிக்கு 10 ரன்​கள் தேவைப்பட்டது. முதல் பந்​தில் ரன் சேர்க்​கப்​ப​டாத நிலை​யில் அடுத்த 2 பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்​கப்​பட்​டது. இதனால் 3 பந்துகளில் 8 ரன்​கள் தேவை என்ற சூழ்​நிலை உரு​வானது. 4-வது பந்​தில் லோகேஷ் பாம் 2 ரன்​கள் சேர்த்​தார். அடுத்த பந்​தில் ரன் ஏதும் சேர்க்​கப்​பட​வில்​லை.

கடைசி பந்​தில் வெற்​றிக்கு 6 ரன்​கள் தேவைப்​பட்ட நிலை​யில் சாம் கரண் தாழ்​வாக வீசிய புல்​டாஸை லோகேஷ் பாம் டீப் கவர்திசை​யில் அடிக்க ஒரு ரன் மட்​டுமே கிடைத்தது. 20 ஓவர்​கள் முடி​வில் நேபாள அணி 6 விக்​கெட்​கள் இழப்புக்கு 180 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. லோகேஷ் பாம் 20 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 39 ரன்​களும், கரண் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

இங்​கிலாந்து அணி சார்​பில் லியாம் டாவ்​சன் 2 விக்கெட்களை வீழ்த்​தி​ னார். லூக் வுட், ஜோப்ரா ஆர்ச்​சர், வில் ஜேக்​ஸ், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணிக்கு 2 புள்​ளி​கள் வழங்​கப்​பட்​டன.

ரன்​ வேட்​டை​யில் ஜாஸ் பட்​லர் 3-வது இடம்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இங்​கிலாந்​தின் ஜாஸ் பட்​லர் 26 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். அவர், 4 ரன்​கள் எடுத்​திருந்த போது டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக ரன்​கள் குவித்​தவர்​களின் பட்​டியலில் இலங்​கை​யின் மகேலா ஜெயர்​வத்​தனேவை (1,016 ரன்​கள்) பின்​னுக்​குத்தள்ளி 3-வது இடத்​துக்கு முன்​னேறி​னார்.

36 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள ஜாஸ் பட்​லர் இது​வரை 1,039 ரன்​கள் சேர்த்​துள்​ளார். இந்த வகை சாதனை​யில் விரராட்​ கோலி (1,292), ரோஹித்​ சர்​மா (1,220) ஆகியோர்​ முதல்​ இரு இடங்​களில்​ உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here