உபெர், ஓலா, ராபிடோவுக்கு மாற்றாக டெல்​லி, குஜ​ராத்​தில் பாரத் டாக்ஸி

0
17

மத்​திய கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா, நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புச் சேவை​யான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா பேசும்​போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்​கட்​ட​மாக டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

அடுத்த 2 ஆண்​டு​களுக்​குள் அனைத்து மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களுக்​கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்​பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை​யிலும், துவாரகா முதல் காமாக்யா வரை​யிலும் நாடு முழு​வதும் ‘பாரத் டாக்​ஸி’ விரிவுபடுத்தப்படும். பாரத் டாக்​ஸி​யுடன் இணைந்​துள்ள ஓட்​டுநர்​களு​டன் லாபம் பகிர்ந்து கொள்​ளப்​படும்” என்றார்.

நாட்​டின் வாகன அழைப்​புச் சேவைச் சந்​தை​யில் தற்​போது உபெர், ஓலா மற்​றும் ராபிடோ போன்ற ஒரு சில நிறு​வனங்​களே ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இவற்​றுக்கு மாற்​றாக மத்​திய அரசே பாரத் டாக்ஸி சேவையை தொடங்கி உள்​ளது. இந்த தளத்​தின் மூலம் வாடிக்​கை​யாளர்​கள் கார்​கள், மூன்று சக்கர வாக​னங்​கள் மற்​றும் இருசக்கர வாக​னங்​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

2002-ம் ஆண்​டின் பல மாநில கூட்​டுறவு சங்​கங்​கள் சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டு, ஜூன் 6, 2025 அன்று நிறு​வப்​பட்ட பாரத் டாக்​ஸி, ‘பூஜ்ஜிய கமிஷன்’ மற்​றும் ‘சர்ஜ் கட்​ட​ணம் இல்​லாத’ (தேவை அடிப்​படை​யில் அதிக கட்​ட​ணம்) விலை மாதிரி​யில் இயங்​கு​கிறது.

எட்டு முன்​னணி கூட்​டுறவு அமைப்​பு​களின் ஆதர​வுடன், டிசம்​பர் 2-ம் தேதி டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் சோதனை அடிப்​படை​யில் பாரத் டாக்ஸி சேவை தொடங்​கப்​பட்​டது. பாரத் டாக்ஸி உலகின் முதல் மற்​றும் மிகப்​பெரிய கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புத் தளமாக​வும், உலகின் மிகப்​பெரிய ஓட்​டுநர்​களுக்​குச் சொந்​த​மான நகர்​வுத் தளமாக​வும் உரு​வெடுத்​துள்​ள​தாக கூட்​டுறவு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

சோதனை முறை​யில் தொடங்​கப்​பட்​ட​திலிருந்​து, 3 லட்​சத்​துக்கும் அதி​க​மான ஓட்​டுநர்​கள் இத்தளத்​தில் இணைந்​துள்​ளனர். 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பயனர்​கள் பதிவு செய்​துள்​ளனர். மேலும் டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் நாளொன்​றுக்கு 10,000-க்​கும் மேற்​பட்ட பயணங்​கள் நிறைவு செய்​யப்​படு​கின்​றன.

இத்​தளம் ஓட்​டுநர்​களை ‘சா​ர​தி​கள்’ என்று அழைப்​ப​தோடு, அவர்​களுக்கு சுகா​தார காப்​பீடு, விபத்து காப்​பீடு, ஓய்வூதிய சேமிப்பு மற்​றும் பிரத்​யேக ஆதரவு அமைப்பு மூலம் சமூக பாது​காப்​புக்கு முன்​னுரிமை அளிக்​கிறது. இதற்கான ஆதர​வு மையங்​கள்​ டெல்​லி​யில்​ ஏழு இடங்களில்​ இயங்​கி வரு​கின்​றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here