4-வது டி20 போட்டியில் தோல்வி ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

0
58

நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 50 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. 216 ரன்​கள் இலக்கை துரத்திய இந்​திய அணி 18.4 ஓவர்​களில் 165 ரன்களுக்கு ஆட்ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக ஷிவம் துபே 23 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் விளாசி​னார். ரிங்கு சிங் 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் சேர்த்​தார். அபிஷேக் சர்மா 0, கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 8, ஹர்​திக் பாண்​டியா 2 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தனர்.

சஞ்சு சாம்​சன் 15 பந்​துகளில் 24 ரன்​கள் சேர்த்த நிலை​யில் மிட்​செல் சாண்ட்​னர் பந்​தில் எளி​தாக போல்​டா​னார். இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 6 பேட்​ஸ்​மேன்​கள், 5 பிர​தான பந்து வீச்​சாளர்​களு​டன் களமிறங்​கியது. இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்ட நிலை​யில் டாப் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​களிடம் இருந்து சிறப்​பான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை.

நடு ஓவர்​களில் ஷிவம் துபே அதிரடி​யாக விளை​யாடி​னார். ஆனால் மறு​முனை​யில் அவருக்கு உறு​துணை​யாக மட்டையை விளாசும் வகை​யில் எந்த பேட்​ஸ்​மேனும் இல்லாதது பின்​னடை​வாக அமைந்​தது. ஷிவம் துபே ஆட்டமிழந்த பின்​னர் முழு​மை​யாக 5 ஓவர்​கள் மீதம் இருந்தன. ஆனால் பின்​வரிசை பேட்​டிங்​கில் அனைத்​துமே பந்​து​வீச்​சாளர்​களாக இருந்​த​தால் அவர்​களிடம் இருந்து பெரிய அளவி​லான தாக்​குதல் ஆட்​டம் வெளிப்​பட​வில்​லை.

விசாகப்​பட்​டினம் போட்​டிக்கு பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​ட​னான சூர்​யகு​மார் யாதவ் கூறிய​தாவது: நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 6 பேட்​ஸ்​மேன்​களு​டன் விளை​யாட வேண்​டும் என்ற திட்​டத்​துடன்​தான் களமிறங்​கினோம். சரி​யான வகை​யில் 5 பந்து வீச்​சாளர்​கள் இருக்க வேண்​டும் என்று நினைத்​தோம். ஆட்​டத்​தின் முடிவு பரவா​யில்​லை.

உலகக் கோப்பை அணி​யில் இடம் பெற்​றுள்ள அனைத்து வீரர்​களை​யும் நாங்​கள் விளை​யாட வைக்க விரும்​பினோம். நாங்​கள் முதலில் பேட்​டிங் செய்​யும் போது சிறப்பாக செயல்​படு​கிறோம். எனவே 2-வது பேட்​டிங்​கில் 180 அல்​லது 200 ரன்​கள் இலக்கை துரத்​தும் போது இரண்டு அல்​லது மூன்று விக்​கெட்​களை விரை​வாக இழந்​தால் நாங்கள் எப்​படி பேட்​டிங் செய்​கிறோம் என்​ப​தைப் பார்க்கவும், வீரர்​கள் அந்​தப் பொறுப்பை ஏற்று விளையாட வேண்​டும் என்றும் விரும்​பினேன்.

எனவே இது ஒரு நல்ல சவால். அடுத்த ஆட்​டத்​தில் மீண்​டும் ஒரு வாய்ப்பு கிடைத்​தால், நாங்​கள் மீண்​டும் இலக்கை துரத்​து​வோம் என்று நம்​பு​கிறேன். எப்​படி இருப்​பினும் இதில் இருந்து கற்​றுக்​கொண்​டுள்​ளோம். பனிப்​பொழிவு அதி​கம் இருந்த நிலை​யில், ஷிவம் துபே பேட்​டிங் செய்​தது போன்று ஒன்​றிரண்டு பார்ட்​னர்​ஷிப்​கள் அமைந்திருந்தால் ஆட்​டத்​தின் முடி​வில் நிறைய வித்தியாசம் இருந்​திருக்​கும்.

50 ரன்​கள் வித்​தி​யாசத்​தில்​தான் தோற்​றுள்​ளோம், ஆனால் பரவா​யில்​லை. நான் கூறியது போன்று துரத்​தலின் போது ஒன்று அல்​லது இரண்டு பார்ட்​னர்​ஷிப்​கள் சிறப்​பாக அமைந்​திந்​தால் அது வித்​தி​யாசத்தை ஏற்​படுத்​தக்​கூடும். இவ்​வாறு சூர்​யகு​மார் யாதவ் கூறி​னார். 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் இந்​திய அணி 3-1 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் கடைசி ஆட்​டம்​ நாளை (31-ம்​ தேதி) திரு​வனந்​த​புரத்​தில்​ நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here