டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி பிப்.2-ல் இலங்கை பயணம்

0
57

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் பங்கேற்​ப​தற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி பிப்​ர​வரி 2-ம் தேதி அதி​காலை இலங்​கைக்கு புறப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்​லது இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்டத்தையோ பாகிஸ்​தான் அணி புறக்​கணிப்​ப​தற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரியத்துக்கு நெருக்​க​மான வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன.

ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்குகிறது. இதில் 20 அணி​கள் கலந்துகொள்கின்றன. இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெறுள்​ளது. இதே பிரி​வில் போட்டியை நடத்​தும் நடப்பு சாம்​பி​யனான இந்​தி​யா, நமீபியா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

இதற்​கிடையே ‘சி’ பிரி​வில் இடம் பெற்ற வங்​கதேச அணி பாது​காப்பு காரணங்​களை கருதி இந்​தி​யா​வில் வந்து விளை​யாட மறுத்​தது. இதையடுத்து அந்த அணியை ஐசிசி அதிரடி​யாக நீக்​கி​விட்டு ஸ்காட்​லாந்து அணியை சேர்த்​தது. இந்த விவ​காரத்​தில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் வங்​கதேச வாரி​யத்​துக்கு ஆதர​வான நிலைப்பபாட்டை எடுத்​திருந்​தது. இதன் காரண​மாக டி 20 உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பது குறித்து தங்​கள் நாட்டு பிரதமரிடம் ஆலோ​சனை கேட்​போம்.

அரசு அனு​ம​தித்​தால் மட்​டுமே டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்​கேற்​போம் என பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத் தலை​வார் மோஷின் நக்வி தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “பிப்​ர​வரி 2-ம் தேதி அதி​காலை​யில் உலகக் கோப்பை அணி கொழும்​புக்​குப் புறப்படுவதற்கான பயண ஏற்​பாடு​களை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரியம் ஏற்​க​னவே செய்​துள்​ளது.

பாகிஸ்​தான் அணி உலகக் கோப்பை தொடர் முழுவதையும் இலங்​கை​யில்​தான் விளை​யாடு​கிறது. எங்கள் அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றால் அந்த ஆட்​ட​மும் இலங்​கை​யில்​தான் நடை​பெறும். எனவே எந்த அடிப்​படை​யில் முழு தொடரையோ அல்​லது இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியையோ புறக்​கணிக்க முடி​யும்?

பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர் மோஷின் நக்வி மற்​றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இடையே​யான சந்திப்​பின் போது, பாகிஸ்​தான் கிரிக்​கெட்​டுக்கு நிலையான மற்​றும் வளமான எதிர்​காலத்தை உறுதி செய்யும் அனைத்து விஷ​யங்​களை​யும் ஆராய்​வதன் முக்கி​யத்​து​வத்தை நக்வி வலி​யுறுத்​தி​னார். அதே நேரத்தில் ஐசிசி மற்​றும் சக உறுப்​பினர் வாரி​யங்​களு​டன் வலு​வான உறவு​களை வளர்ப்​ப​தை​யும் அவர் வலியுறுத்தினார்.

இந்​திய அரசாங்​கம் தனது அணி பாகிஸ்​தானில் விளையாடு​வதற்கு அனு​ம​திக்​க​வில்​லை. ஆனால் ஆசிய கோப்பை அளவி​லான போட்​டிகளில் அல்​லது நடுநிலையான இடங்​களில் நடை​பெறும் ஐசிசி போட்டிகளில் பாகிஸ்​தானுடன் இந்​தியா விளை​யாடு​வதற்கு எந்​தத் தடை​யும் இல்​லை.

விளை​யாட்​டில் அரசி​யல் கலக்​கக்​கூ​டாது என்று பாகிஸ்தான் அரசாங்​கம் எப்​போதும் கூறி வரும் நிலையில், இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியைப் புறக்​கணிப்​பதை பாகிஸ்​தான் எவ்​வாறு நியாயப்​படுத்​தும்?” என்​றார். பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய அதி​காரி​யின் இந்தத் தகவலால் அந்த அணி டி 20 உலகக் கோப்​பையையோ அல்​லது இந்​திய அணிக்கு எதி​ரான ஆட்டத்தையோ புறக்​கணிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்​படு​கிறது.

வரும் 2027-ம் ஆண்டு வரை ஐசிசி தொடர்​களில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதும் ஆட்​டங்​கள் பொது​வான இடத்​தில் மட்​டுமே நடத்​தப்​படும் என ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாகவே இம்​முறை டி20 உலகக்கோப்​பை​யில் பாகிஸ்​தான்​ அணி விளை​யாடும்​ அனைத்​து ஆட்​டங்​களும்​ இலங்​கையில்​ நடத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here