108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் தொடங்கி 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று சுமார் 12 மணியளவில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு களப அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 26-ம் தேதி வரை தினமும் மதியம் களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜையின் இறுதி நாளான 27-ம் தேதி காலை 10 மணியளவில் 47 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.














