திருவட்டாறு பகுதியை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தோமஸ் (58), நேற்று முன்தினம் இரவு நண்பருடன் மது அருந்தியுள்ளார். நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் காணப்பட்டார். இது குறித்து அவரது மனைவி திருவட்டாறு போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














