நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த 77 வயதான கனகம் என்பவரின் வீட்டை, சொத்து பிரச்சனை காரணமாக ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளது. தட்டிக் கேட்ட மூதாட்டியை தாக்கியதாகவும், கருங்கல் போலீசில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த மூதாட்டி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.














