குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடைபாதை பாலத்தில் தண்ணீர் பாயும் மடை பகுதியில் பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகள் தேங்கி, பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, குழித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதியைச் சுத்தம் செய்து, பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றினர். இதனால் இப்பகுதி தற்போது சுத்தமாக மாறியுள்ளது.














