டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி பறிப்பு

0
25

தெற்கு டெல்​லி​யிலுள்ள கிரேட்​டர் கைலாஷ் பகு​தி​யில் முதிய தம்​ப​தி​யினர் வசிக்​கின்​றனர். இரு​வருமே டாக்​டர்​கள். அமெரிக்​கா​வில் பணியி​ல் இருந்து ஓய்வு பெற்ற நிலை​யில் இந்தியா திரும்​பியுள்ளனர்.

இவர்​கள் சார்​பில் டெல்லி சைபர் கிரைம் போலீ​ஸில் ஒரு புகார் தரப்​பட்​டுள்​ளது. அதில் அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: கடந்த ஆண்டு டிசம்​பர் 24ம் தேதி செல்​போனில் எங்​களுக்கு அழைப்பு வந்​தது. அதில் பேசிய நபர்​கள் போலீ​ஸார் என்​றும், எங்​களை டிஜிட்​டல் அரஸ்ட் செய்​துள்​ள​தாக​வும் தெரி​வித்​தனர். தொடர்ந்து அழைப்பில் இருக்​கு​மாறு, அழைப்பை துண்​டித்​தால் நேரில் வந்து கைது செய்து விடு​வ​தாக​வும் மிரட்​டினர். தொடர்ந்து எங்​களை வீடியோ காலில் இருக்​கு​மாறு அவர்​கள் மிரட்​டினர்.

பின்​னர் எங்​களின் வங்​கிக்கணக்கு விவரங்​களை தெரிந்து பணத்தை பல்​வேறு கணக்​கு​களுக்கு மாற்​றி​விடு​மாறு தெரிவித்தனர். ரூ.14 கோடி அளவுக்கு அவர்​கள் பணத்தை மாற்றிவிட்​டோம். பிறகு​தான் அவர்​கள் மோசடி செய்தது தெரியவந்​தது. கடந்த டிசம்​பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை அவர்​கள் எங்​களை மிரட்டி வந்​தனர். இவ்​வாறு அவர்​கள் அதில் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரித்​து வருகின்றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here