ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில், மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா சமாஜ் இன்டர்நேஷனல் (MASSI UAE) அமைப்பின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ ஜெ. பகவதி குருக்கள் நேரில் கலந்துகொண்டு பூஜைகளை நடத்தினார். இந்த விழாவில் 1000க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கலிடப்பட்டது.











